ஹேப்பி நியூ இயர்
ஹேப்பி நியூ இயர்
====================================ருத்ரா
"ஹேப்பி நியூ இயர் !"
வர்ண அட்டையில் எழுதிக்காட்டினான்
பேரன்.
இற்றுப்போன தமிழ்ச்சாய்வு
நாற்காலியில்
கிடந்த தாத்தா
இருமிக்கொண்டே சொன்னார்.
"தமிழுக்கு என்றுமே
இனிய புத்தாண்டு தான்
என் அன்புப் பேரனே!"
==============================================