புத்தாண்டு 2019
வருக வருக வருகவே இனிய புத்தாண்டு
வந்து இன்பமெல்லாம் அள்ளி தந்திடவே
உலகோர் எல்லார்க்கும், அல்லலெல்லாம்
அறவே நீங்கிடவே எங்கும் அன்பெனும்
ஆறு பாய்ந்திடவே வன்மம் எல்லாம்
அடியோடு ஒழிந்திடவே,ஒற்றுமை, அமைதி
உலகெங்கும் திக்கெல்லாம் துணையாய் இருந்திடவே
நாட்டின் மக்கள் எல்லாம் நல்லோர் சேர்க்கையில்
நல்லதையே நாடி, நல்லதையே கேட்டு நன்மை
தரும் காரியங்களிலேயே ஈடுபடுதல் வேண்டும்
இந்த இனிய புத்தாண்டுமுதல் , நாட்டிற்கு நல்ல
குடிமகனாக ஒவ்வொருவரும் இருந்திடல் வேண்டும்
புத்தாண்டில் புதியதோர் பிரதிக்கியை செய்வோம்
உண்மையையே நாடுவோம் உண்மைபேசுவோம்
ஊழலை ஒழிப்போம் நாடு முன்னேற
இயற்கை வளங்கள் கூட்டுவோம் இயற்கையோடு
ஒன்றி வாழ கற்றிடுவோம் , நம் பிள்ளைகளுக்கும்
அதையே போதித்திடுவோம் , நாட்டில் நல்ல
நீர்வளம் பெருகி மண்வளம் ஏற விவசாயம்
முபபோகம் தந்திடல் வேண்டும் மாதம்
மும்மாரி பெய்திடல் வேண்டும் குறையற்ற
வாழ்வு எமக்களிக்க புத்தாண்டே நீ வருக , வருக
நன்மைகளே நல்கும் இனிய புத்தாண்டாய்.