கட்டிப்பிடி வைத்தியம்

கவிதையால் கட்டிப் போட்டு /
நடிப்பால் கெட்டியாய்ப் பிடித்து/
இசையால் விலங்கிட்டு/
பாசத்தால் இறுக்கப் பிடித்து/

கிளிப் பேச்சால் மயக்கம் கொடுத்து/
சிறு கோபத்தால் சீண்டி விட்டு/
நித்தமும் தலையணையை அணைத்து /
முத்தம் கொடுக்க விட்டு/

(ஊமையாக உலாவும்
உத்தமனே)

ஒத்தையிலே உறங்குகிறேன்/
மெத்தையிலே இடம் ஒதுக்குகிறேன்/
மொத்த இரவையும் /
வெத்து இரவாகவே முடிக்கிறேன் /

ஒட்டி உறங்கும்
நாளுக்காக ஏங்குகிறேன்/
குட்டிக் குட்டிக்
கனவுக்குள் நுழைகிறேன்/
சுட்டித்தனம் போதுமே /
கட்டிப் பிடி வைத்தியம் வேணுமே/😜

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (3-Jan-19, 5:10 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 336

மேலே