அவளின் முடிச்சு

மங்கை அவள் தெளித்தாள்
வாசலில் நீரை
அவள் கண்ணில் பெருகிய
அருவி நீரோ
முந்திக்கொண்டு
பூமியைத் தொட்டது
மாவை அள்ளினாள்
இரு விரல்களால்
புள்ளிகளை இணைத்து
சிக்கல் கோலம்
முடிச்சு இல்லாமல்
நேர்த்தியாய்
அவள் கழுத்தில்
விழுந்த முடிச்சு
சிக்கலோடு
அவிழ்க்கமுடியாமல்
ஏனோ

எழுதியவர் : உமாபாரதி (5-Jan-19, 10:15 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : avalin mudichu
பார்வை : 94

மேலே