ஜென்ம மரணம்

பிறந்தவுடன் மரணமாக
பிறப்பில் அதிசயம் கண்டு,
காம தேவர்களின் பார்வை எனும் அம்புகளில் தன்னை காத்துகொள்ள..
உடையெனும் கவசம் அணிந்து,
அச்சம் எனும் போர் தொடுத்து..
வம்சத்தை உருவாக்க வாழ்க்கை மறந்து..
பிறப்பின் உச்சமாக கருதும் அவள்,
தன் குடும்பம் காக்க கடவுளை தேடி சென்றபோது
அவள் சபிக்கப்பட்டவள் என்று விரட்டும் நான் அவள் தொப்புள் கொடியில் வெட்டப்பட்டவன்..
"உன்னை மறந்த எனக்கு மறு ஜென்மமும் மரணமே.

எழுதியவர் : நியூட்டன் சர்ச்சில்.குரு (6-Jan-19, 10:59 am)
சேர்த்தது : Newton
Tanglish : jenma maranam
பார்வை : 98

மேலே