என்னவள்
பண்பான சீரான உந்தன் பார்வை
என் மனதை கவர்ந்திட நமக்குள்
காதல் உறவு உருவானதுஎன்றால்
உன் அன்பிலும், அரவணைப்பிலும்
தாய்மையைக் கண்டேன் ,நீ
ராகத்தின் ஷட்ஜமம், பஞ்சமும் போல்
உன் அன்பாலும் , பண்பாலும் நம்
காதல் வாழ்க்கைக்கு ஓர்
கட்டிடமே கட்டி காத்து நிற்கின்றாயடி என்னவளாய்.