உயிராய் உறைகிறேன்

வஞ்சி எழில்
பிஞ்சு தமிழ்
வையம் வியக்க

கொஞ்சு விழி
நெஞ்சுதனில்
மையம் கொள்ள

நெருஞ்சி இடையும்
இதமாய் கொல்ல

செஞ்சி கோட்டை மூன்றென
முன்னம் சொல்ல

மிஞ்சிய அழகு
பதியும் மதியில்
எஞ்சிய நினைவும்
படரும் உன் மடியில்

இதழில் சறுக்கி
இதயத்தில் விழுந்து
இன்பத்தில் கரைந்து
உயிரில் உயிராய் உறைகிறேன்

எழுதியவர் : ஜெகன் ரா தி (6-Jan-19, 1:13 pm)
சேர்த்தது : ஜெகன் ரா தி
பார்வை : 456

மேலே