காதல்
தேவகன்னியரும் கண்டு பொறாமைக்கொள்ளும்
பேரழகி அவள், மன்மதன் அவன் , அவள் காதலன்
இருவரும் ஒருவரை ஒருவர் மறந்து காதல் மயக்கத்தில்
கட்டுண்டு மயங்கி இருக்க , ஆங்கு வந்த
முனிவர் பெருமானை கண்டும் காணாததுபோல் இருக்க
கோபம்கொண்ட முனிவர் பிடி சாபம் என்று
அழகு கன்னியை பவளத்தீவாய் மாற்றி
அவள் காதலனை கடலாய் போக சபித்தார்;
செம்பவளத்தீவு அதோ என் கண்முன், அதை, அந்த
செம்பவள பாவையை,
சுற்றி சுற்றி வளையவருகிறான் அவன் கடலாய்
அலையாய் அலையாய் வந்து முத்தம் தந்து,
அவன் காதலி கன்னி பவளத்திற்கு.