என்னவென்று அழைப்பது ?
என்னவென்றழைப்பது ?????
நீதி கேட்டுப் போராடும் ஓர் உயிர்
பன்னிரண்டு நாட்களாய்
கண்கள் பஞ்சடைந்து கிடப்பதை !!!!!!!!
தொலைக்காட்சித் தொடர்போல
பேசிப் பேசி பேசியே நீளும்
பாராளுமன்ற நாடகக் காட்சிகளை !!!!!!!!
இதை விழிகள் விரிய பார்த்துக் கொண்டு
'உச்' கொட்டிக்கொண்டோ ,
கோபமாய் விமர்சித்துக் கொண்டோ
உட்கார்ந்து கொண்டிருக்கும்
நம்முடைய நிலையை !!!!!!!!!!!!
என்னவென்று அழைப்பது ????????
பாரதியின் 'நெஞ்சு பொறுக்குதில்லையே'
அன்றும் ,இன்றும் ,என்றும் ........