இம்சை அரசனோ?

அன்னா!
நீயும் அஹிம்சையில் இம்சை அரசனோ?

அதிர்கிறது இரு அவைகளும்!
அதிர்வலையில் ஓலங்கள் கேட்கிறது பாராளுமன்றதில்!

இன்று வரை அரசியல் வாதிகள் கொண்ட முகத்திரைகள் கிழியும்!

இனி ஜனநாயகத்தின் உண்மை பொருளை மக்கள் அறிவர்!

மக்களுக்காக அரசா?
அரசிற்காக மக்களா?
என்பதின் பொருள் விளங்கும்!

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!
நீ செத்தாலும் உன் கொள்கைகள் எங்கும் முழங்கும்!

எழுதியவர் : நா.சந்தீப் (27-Aug-11, 9:24 am)
சேர்த்தது : sandeep
பார்வை : 368

மேலே