சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நிற்றல் வியப்பு – நன்னெறி 12
நேரிசை வெண்பா
வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை - திருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ? நிற்றல் வியப்பு. 12 – நன்னெறி
பொருளுரை:
திருத்தமான அணிகலன்களை உடையவளே!
குளிர் நீர் விரிவுபட்ட பொத்தல் குடத்தில் நிற்காது வெளியே ஒழுகிவிடுவது வியப்பல்ல, அந்த ஓட்டைக் குடத்திலேயே அது தங்கியிருந்தால் அதுவே வியப்பு.
அது போல வருந்துகின்ற உயிரானது ஒன்பது ஓட்டைகளுள்ள இந்த உடம்பில் வெளியேறி விடாமல் இருந்து கொண்டிருக்கிறதே அதுவே வியப்பு.