காற்றுத் தழுவும் கட்டழகே

நஞ்சை உனது மனமடி
நான் விதையாய் விழுந்து விட்டேன்
அஞ்சுகமே அதை நீயும்
அழகான பயிறாய் வளரடி
பாசமுள்ள பைங்கிளியே - உன்மேல்
ஆசையுடன் காத்திருக்கேன்
ஓசையுடன் ஓடி வந்து உதட்டில் முத்தம் தாயேண்டி
காற்றுத் தழுவும் கட்டழகே
காணக்கிடைக்காத காதல் அமுதே
வீணையில் தோன்றும் கான ஒலி போல்
விர்ரென்று பேசும் பேதைக் குயிலே
ஆற்றொன்னா துயரில் நான் துடிக்கிறேன்
அணைக்க வாயேன்டி அழகியின் பெண்ணே
- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (8-Jan-19, 8:44 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 194

மேலே