வாழ்க்கை வரிகள்

வாழ்க்கையின் மதிப்பு
காலத்தின் மதிப்பை
உணர்ந்தவனுக்கு
அதிகரிக்கிறது

நிகழ்காலத்தை திட்டமிட்டு
தியாகம் செய்ப்பவர்களே
எதிர்காலத்தில்
ஜெயிக்கிறார்கள்

வாழ்க்கையின் ஆசைகள்
முழுதாய் தீராது
முற்றும் தணியாது
வாழ்வை நாசம் செய்யும்
நச்சு கிருமி கூடா ஒழுக்கம்.

நல்லதும் கெட்டதும்
நாக்காலே
கூறும் வாக்கலே
சிலரின் நற்செயல்கள்
பலரின் வழிகாட்டி
கடந்த சோதனை
சிறந்த அனுபவம்

நட்பாளர்களின் முகத்தை வைத்தே
நம்மின்
முகமும் அகமும்
பரிசீலிக்கப்படுகின்றது

அச்சமற்ற தன்மை
அன்புடன் வாய்மை
சீரிய வாழ்வின்
சிறந்த அடித்தளம்

கிணற்றின் அருமை
வற்றினால் புரியும்
சிந்திக்க தூண்டுவதே
கல்வியின் நோக்கம்

அழகற்ற முகம்
அழகற்ற மனம்
இரண்டிலும் மேலானது
அழகற்ற முகம்

வாழ்க்கையின் நம்பிக்கை
பகுத்தறிவின் தொடர்ச்சி
நல்ல எண்ணம்
நடத்தையின் பாதுகாப்பு
நாமும் வாழ்வோம்
மற்றவரையும் வாழவிடுவோம்.


(கற்றதும், கேட்டதும்)

எழுதியவர் : ந.அலாவுதீன் (8-Jan-19, 7:09 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
Tanglish : vaazhkkai varigal
பார்வை : 1138

மேலே