சருகாய்

வாழை இலைக்கு
வரவேற்பு அதிகம்
பந்தியில்..

முந்திய காலம் போனதும்,
முழு வெயிலில் காய்ந்து
உருக்குலைந்து
தெருவுக்கு வந்துவிடுகிறது-
சருகாய்..

அப்படித்தான்
அழகென்று நாம்
அலைந்து தேடிடும்
அணங்குகளின் உருவும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Jan-19, 7:02 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : sarugaai
பார்வை : 77

மேலே