கவிதையே ஜெயித்தது

என்ன தவம் செய்ததோ உன்னுடைய வீட்டு கண்ணாடிகள்
நித்தமும் காலை உன்னையே தரிசிக்கின்றன!
உன்னுடைய மொத்த அழகையும் சுமந்து கொண்டு ஒவ்வொரு நாளும் வாழ்கிறது!
நித்தமும் நித்திரை கொள்ளாமல் உன் வருகையை எதிர்பாத்து
சுழன்று கொண்டிருக்கும் உன் வீட்டு கடிகாரம்!
உன் அழகிய கூந்தலை அலங்கரிக்க உனக்காகவே உருகும் உன் வீட்டு ரோஜா!
உன் கூந்தலை வருடுவதற்கென பிறவி எடுத்த அந்த காற்று!
வழி நெடுகும் உனக்கென இசை பாடி உன்னை கவர நினைக்கும் குயில்கள்!
இவற்றை எல்லாம் நான் எப்படி ஜெயிப்பேனோ? என்று நினைத்து
கொண்டிருக்கும் என்னுடைய இதயம்!
இவை ஏதும் ஜெயிக்கவில்லை இறுதியில் என்னுடைய கவிதையே
உன்னை வர்ணித்து ஜெயித்தது.

எழுதியவர் : சுவர்ணராஜ் (8-Jan-19, 5:39 pm)
Tanglish : kavithaiye jayithu
பார்வை : 537
மேலே