மாயையில்
எல்லாம்தெரியும் எனக்கு
அலட்சியம்
எனக்கு மட்டும்தான்
எல்லாம் தெரியும்
ஆனவம்
எல்லாம் தெரியும் எனக்கு
கர்வம்
இவற்றின் மொத்த
வடிவம் நான்
யார்சொல்லியும் எதுவும்
கேட்டதில்லை
நான் நினைத்தால்
இந்த உலகம்
சுற்றுவது நிற்குமென
கற்பனையில்
என்னைப் போலவே
ஒருகூட்டம்
நான் நினைத்தபடி
தானும் நினைத்து
இப்பூமியில் வெறும்
மாயையில்..,