தூரிகையின் துணைகொண்டு

பார்த்த விழி பார்த்திருக்க

பூத்திருக்கும் அதரம்
சொல்ல

நினைப்பதென்ன

இடுப்பின் குழைவை
காட்டி

ஈர்க்க நினைத்தானோ?

கொங்கையின் செழுமை
காட்டி

கொள்ள நினைத்தானோ?
தெரியாது

தான் வடித்த ஓவியத்தின்
முகவடிவை நம்பாது

தூரிகையின் துணை
கொண்டு

வக்ரத்தை ஊட்டிவிட்டான்
ரசனையென்ற பெயரில்

நானும் ரசனையென்ற
புனைப்பெயரில்

வக்கிரத்தோடு ரசிக்கின்றேன்

உளவியல் நிபுணன் அவன்
வெற்றிபெற்றான்

எழுதியவர் : நா.சேகர் (11-Jan-19, 2:23 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 79

மேலே