மண்ணும் மரியாதை பெறும்

ஆண்டவனைத் தொழுது
அருள் பெற உதவுவது
அன்பு, அகிம்சை என்ற
இரண்டும் தான்—மனதுக்கும்
அமைதி தரும்

அந்நிய ஆதிக்கத்தை
அகற்றியது அகிம்சை,
அடிமைகளின் விடுதலைக்கும்
எழுச்சிக்கும் உதவியது
அன்பும், அகிம்சையும் தான்

பழிக்கு பழியென்றால்
பாவம் வந்து சேரும்—எப்போதும்
பின் தொடரும்,
அன்பும், அறமும் உடையோன்
அகிலம் ஆள்வான்

நீயும் வாழு,
பிறரையும் வாழவிடு,
மன்னிக்கும் சுபாவமும்
மனிதநேயமும் இருந்தால்
மண்ணும் மரியாதை பெறும்

எழுதியவர் : கோ. கணபதி. (10-Jan-19, 6:18 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 54

மேலே