எப்போதும் இன்பம் தான்

எதைப் பெற்றால்
எல்லாமும் கிடைக்கும்,
எதை இழந்தால்
அனைத்தும் போகுமென்று
அகம் எண்ணுகிறதோ
அதுதான் சமயம்

சமுதாய சிறப்புக்கு
சான்றாகத் திகழும்
சாதனை புரியும்,
இந்த சமயத்துக்கு
அடித்தளம்
அன்பு என்னும் கருணை

அனைத்து உயிர்களையும்
அன்போடு நேசித்து
அரவணைத்து காத்தால்
அனைவரும் தெய்வந்தான்
எல்லோரும் சொந்தந்தான்
எப்போதும் இன்பம் தான்

எழுதியவர் : கோ. கணபதி. (10-Jan-19, 6:16 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 40

மேலே