குருத்திட்டு வளர்வதை அழிப்போம்

எல்லோர் மனதிலும் இது தான் கவலை - இதை
எதிர்ப்பதற்கு யாருக்கும் துணிவும் இல்லை
பரிதாபம் பட்டு பட்டு மனது பாறையாய் ஆனதே மிச்சம்
படித்ததனால் நாமும் தினமும்
மேதாவியாய் ஆனதாய் நினைத்தோம்
படுபாத செயலைக்கண்டும்
பார்க்கததைப் போல் கடந்தே சென்றோம்
அரசாங்க அலுவலகம் சென்றால் - நம்மை
செல்லாய் அரிக்கின்ற செயலுக்கு பயந்தோம்
அரசு காவல் நிலையம் போனால் - அங்கு
கையூட்டை கேட்க கண்டு கண்மூடி கூசி நின்றோம்
வருவாய் அலுவலகம் சென்று
வம்சத்திற்கான சான்றைக் கேட்டால் - கெட்ட
வார்த்தையால் அர்ச்சிக்க கேட்டு
அங்கேயே அரண்டு நின்றோம்
எரிவாயு மானியத்திற்காக - எண்ணை இணைக்க
எல்லா வங்கிக்கும் சென்றும் - அவர்களின்
ஏளன ஏச்சினாலே எண்ணிலா துயரம் கொண்டோம்
அரசின் விவேகமில்லா செயலினாலே-அரசுக்கு
வரி கொடுக்கும் எஜமானர் நாமோ - பகலில்
காகம் கொல்லும் கூகையாய் மாறியது ஏனோ?
நாம் கூப்பிட்டால் ஓடிவர வேண்டிய
நல்ல கூலிக்கு உழைக்கும் அரசினர்
குறுநில மன்னர் போல் இருப்பதை - எந்நாளும்
குருத்திட்டு வளர்வதை அழிப்போம் !
- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (10-Jan-19, 4:51 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 40

மேலே