கண்ணே கலைமானே

கண்ணே ... கலைமானே !
நீயே ... செந்தேனே !
பாரம் நீங்கவே உன்னை நெஞ்சில் வைத்தேனே !
சொந்தம் இல்லா எனக்கு புது சொந்தம் நீயடி !
பந்தம் இல்லா எனக்கு புது பந்தம் தானடி !
வாழ்க்கையே வலியாய் இருந்ததே நீ வரும்வரை வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது நீ வளர்பிறை !

மலராய் நீ மனசுல பூத்து வாழ்க்கையில் புது வாசம் செய்கிற !
காற்றாய் நீ மூச்சில் சேர்ந்து என்னை உயிர்வாழ செய்கிற !


பெண் :

காதலா ... புது தேடலாய் நீ வருகிறாய் !
காதலா ... என்னை பாடலாய் நீ ரசிக்கிறாய் !
பாரம் என்ன ? அதுவும் கடந்து போகுமே !
என் காதல் உன்னை வாழ்வில் கரை சேர்க்குமே !
தூய நதி நான் தாகம் தீர்க்கிறேன் !
உன் காதல் மட்டும் என்றும் கேட்கிறேன் !

மலராய் நீ மனசுல பூத்து வாழ்க்கையில் புது வாசம் செய்கிற !
காற்றாய் நீ மூச்சில் சேர்ந்து என்னை உயிர்வாழ செய்கிற !

எழுதியவர் : M . Santhakumar (14-Jan-19, 4:17 pm)
சேர்த்தது : Santhakumar
பார்வை : 161
மேலே