காதல்

பிறந்த நாள் பிறந்த
தினத்தைக் குறிக்கும்
அந்த தினத்தை நினைத்து
பிரதி வருடம் அத்தினத்தைக்
கொண்டாடுகிறோம் , தவறில்லை
இது என்ன காதலர் தினம்...?
காதல் மலர்ந்த தினம்
என்று ஒன்று உண்டு , கொண்டாடலாம்
இது என்ன காதலர் தினம்
காதலர் காதலை விட்டு
ஒரு வினாடி கூட இருப்பதில்லை
தினம் தினம் அவர்களுக்கு
காதல் தினமே ......
காதலர் தினம் பின் எதற்கு ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Jan-19, 4:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 101
மேலே