ஏனோ காதல்

என் இதயத்தோடு சிறுமலராக பூத்தவளே!!
என் உண்மையில்லா உலகிற்கு உரமளித்தவளே!!
என் நேசமெனும் சொத்துக்கு உரிமையானவளே!!
என் உள்ளம் களவாடிய என் பிரியமானவளே!!

எட்டுத் திசையும்
சுற்றித் திரியும்
வானம் மறையும்
காதல் மறையாதே!

என்றும் மலரும்
நின்றாதுதிரும்
முட்டா விரியும்
முள்ளாமல் மலராதே!

கட்டுத் தறியும்
கம்பன் இசையும்
முற்றும் அறியும்
தேடல் முடியாதே!

கள்ளச் சரிப்பும்
ஏற்றப் பார்வையும்
ஈன்ற காதலும்
மனதை அகலாதே!
மனமே அகலாதே...

எழுதியவர் : கா.மணிகண்டன் (14-Jan-19, 5:03 pm)
Tanglish : eno kaadhal
பார்வை : 216

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே