மலரும் கமலம்

இளங்காளைப் பொழுதின்
ஒவ்வொரு நொடியும்
குவிந்திருந்த கமலத்தை
மெல்ல மெல்ல மலரவைக்கும்
அற்புத நொடிகள் -அது
வெள்ளி முளைக்க தொடங்கி,
கதிரவன் குண திசையடைந்து
தன் தங்கக் கிரணங்களை பரப்ப,
கீழ்வானமும் வெளுக்க , கமலமுகமும்
மலர்ந்திடுமே முழுதாய் சிவந்து
காதலனைக் கண்ட காதலியின்
சிவந்த முகம்போல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Jan-19, 5:14 pm)
Tanglish : malarum kamalam
பார்வை : 125
மேலே