மகனே பயின்று வா
தூரத்தில் என் தந்தை
களைப்புற கடைசிக்கட்டத்தில்
எனைநோக்கி கைகாட்டி
அருகில் வந்து எனைக்கடந்து
உறக்க "ஓடு" என கரைந்து!
நானும் வேகம் எடுத்து
அவருடன் சில தூரம் ஓடி
அவரும் ஓட்டத்தை நிருத்தி
என் ஓட்டத்தை ரசித்து
புன்முருவல் மட்டும் சிந்தி
விடைபெற!
தனிமை ஓட்டம்
விரைவினில் பயம் தர!
மனதும் பதர!
சோதனை ஓட்டத்தில்
வேதனையை வென்றிட
தனிமையைக் கொன்றிட
எந்தை கையாண்ட
பொருப்பினை கைகொண்டு
தனிமை ஓட்டத்தின்
நடுவினில் நான்!
எனைமட்டும் இழுத்தோடி
பலப்பல பரிசுகள் வென்றவன்
ஆதலால் இழுக்க சமமான
சரியான துணையினை
திசைக்காட்டியாய் கட்டிட
புதியவள் புதுமையில்
ஓட்டமும் சற்றேற நின்றிட
கலவியில் புத்துயிர்ப் பிறந்திட
திசைக்காட்டியும் தானியங்கிட
மீண்டும் ஓட்டக்களத்தில்
நான்!
ஒட்டத்தில் சிறு தேக்கம்
நோக்கத்தில் சிறு வீக்கம்
துணைவியின் சிறு ஏக்கம்
ஓட்டம் ஒன்றே உன்னுடையதா?
அவளுக்கான பதிலளித்து
நாள்கொடுத்து அவளைச்சுமந்து
மீண்டும்
ஓட்டக்களத்தில் நான்!
ஓட்டமும் நானும்
வேரும் மண்ணுமாய்
நீரும் சேருமாய்!
ஓட்டக்களத்தில் இருவிழியும்
ஒருவனுக்காக ஏங்கிட
சோதனைச்சாலையில்
ஓட்டத்தின் அழுத்தத்தை
அற்புதமாய் பயிலும்
என் தலைமுறை!
எனக்கும் களைப்பாரும்
தலை நறைக்கும்
உனது ஓட்டம்
காண நெஞ்சம் துடிக்கும்
பயின்று வா!
களத்தில் சந்திப்போம்!