சில கனவுகள் சில கவிதைகள்
பசிபிக் ஆர்டிக்
அடலாண்டிக் பெரிங்
ஓகோட்ஸ்க்...
அமேஸோன் நைல்
மிஸிஸிபி யாங்ஸி
கங்கை காவிரி...
என்றெல்லாம் பெயர் கொண்டு
துள்ளி ஓட வேண்டியது..
நன்கு கொப்பளித்து
புளிச்'சென்று துப்பியதும்
சாக்கடையாய் போயிற்று
ஒரு கைப்பிடி நீர்.