சீற்றம் வேண்டாமே
ஏன் இந்த சீற்றம்
எதற்கு தான் இந்த சீற்றம்
கோபம் ரௌத்திரமாகுதே
தீப்பிளம்புகள் பறக்கின்றதே
கங்குகளே அனலாய் பிரகாசமாய்
வேகமாய் சூடர்விடுகின்றதே
ஏன் இந்த தீ
எதற்கு தான் இந்த சீற்றம்
பொறுமையாய் சிந்திப்போமே
எல்லாம் நிறைவேறிடுமே
காலம் ஒரு போதும் நம்மை ஏமாற்றுவதில்லை
நாம் தான் கோபத்தால் துன்பத்தை
தேடுகின்றோம்
விட்டெரிவோமே தூக்கிபோடுவோமே
இந்த கோபத்தை
வரட்டு கோபத்தை
எல்லோர் உலகமும் அன்பால் நிறம்பட்டுமே
எல்லோர் உதட்டிலும் புன்னைகை பூத்துக்குலுங்குட்டுமே
எந்த கெட்டகுணமும் இல்லாமல்
அடிமனதிலிருந்து சிரிப்பு அணிகலனாக ஆகட்டுமே