ரேனுஸ்ரீ - பகுதி 2

கொஞ்சோ பின்னாடி திரும்பி பாரு.என்றால் அம்மு

யாரு உதய் யா?என்று கேட்டேன்

பின்னாடி பாக்காமலே எப்படி சரியா சொல்ற ?என்று கேட்டாள்

என்னோட நிழல விட அதிகமா என்ன பின்தொடர்றது அவன்தா,வேற யாரா இருக்க முடியு?என்றேன்

அதா தெரியுது இல்ல,அப்பறமு தெரியாத மாறியே இருக்க வேண்டியது.என்று குத்தலாக கூறினால்.

ஆமா தெரியு அதுக்கு என்ன பண்ண சொல்ற?அவன் கிட்ட போய் எ பின்னாடி வராதீங்கனு சொன்னா சரினு சொல்லிட்டு போயிடுவானா என்ன?என்று அம்முவை பார்த்து கேட்டேன்.

எனக்கு தெரிஞ்சு இந்த ரெண்டு வருஷமா அவன் உன்பின்னாடித்த சுத்திட்டு இருக்கா.நியூ யாரையு லவ் பண்ற மாறி தெரில.
நம்ப கிளஸ் ல இருக்கா எல்லா பொண்ணுங்களு அவன் பின்னாடி சுத்தறாங்க,அவன் என்னனா உன் பின்னாடிதா சுத்தரா.
நீ அவன கண்டுக்கவே மாட்டேன்ற,அவன பார்த்தா எனக்கே பாவமா இருக்கு,அவன் மேல கொஞ்சமாவது இரக்கம் காட்டு என்று கூறினால்.

நானா அவன எ பின்னாடி வர சொன்ன?என்றேன்

அண்ணா 1kg வெண்டக்கா,1kg கத்தரிக்க கொடுங்க.என்று காய்கறி வியாபாரியை பார்த்து கேட்டேன்.

வியாபாரி காய்களை அளந்து பையில் போட்டு கொண்டிருந்தார்.

500 ரூபாயை எடுத்து வியாபாரியிடம் கொடுத்தேன்,அவர் சிரித்து விட்டு 500 ரூபாய்க்கு எ கிட்ட சில்லர இல்லமா,30 ரூபா இருந்தா குடுங்க,என்றார்

நானும்,அம்முவும் சில்லறையை தேடி கொடுப்பதற்குள் யாரோ 30 ரூபாயை கொடுப்பதை பார்த்தேன்.

யார் என்று பார்த்தால் உதய்,வியாபாரி பணத்தை வாங்கிக்கொண்டு காய்களை கொடுத்தார்,உதய்யை முறைத்தபடி காய்களை வாங்கிக்கொண்டு அவன் அருகில் சென்று பேசலாமா?என்று கேட்டேன்

அம்மு அதிர்ந்துபோய் ஆச்சிரியத்தோடு என்னை பார்த்தால்.

உதய் புன்னகைத்தபடி தலையை ஆட்டினான்.

நானும்,உதயும் சந்தையை விட்டு சிறிது தூரம் சென்று பேச துடங்கினோம்.

எப்ப எ பின்னாடி வர்றத நிறுத்த போறிங்க,என்று உதயை பார்த்து கேட்டேன்.

நீங்க என்ன லவ் பண்ண ஆரம்பிச்சது.அதுக்கு அப்பரோ உங்க பின்னாடி வரமாட்டா,எனா அதுக்கு அப்பரோ உங்க பக்கத்துல உங்க கூட வருவ.என்று கூறினான்

அப்ப கடைசிவரைக்கு என் பின்னாடி வரவேண்டியதுதா,எனா நா என்னைக்கு உங்கள என் கூட வர அனுமதிக்க மாட்ட.என்று கூறினேன்

காரணம் என்னனு நா தெருஞ்சுக்கலாமா?என்று கேட்டான்

எனக்கு உங்க மேல லவ் வரல,அதுக்கான காரணம் எனக்கு தெரியாது.என்றேன்

எனக்கு ஒரு வாய்ப்பு குடு,என்னோட பழகி பாரு,நிச்சயமா உனக்கு என்ன பிடிக்கு,என்ன கண்டிப்பா விரும்புவ.என்று தன்னம்பிக்கையோடு கூறினான்.

கடைக்கு கூட்டிட்டு போய் உங்களுக்கு பிடிக்காத ஷர்ட் ட எடுத்து குடுத்து trial பாக்க சொன்னா நீங்க பாப்பிங்களா?என்று கோபத்தோடு கேட்டேன்

பொறுமையை இழந்து தவித்தபடி நின்றுகொண்டிருந்தான் உதய்.

இன்னொ என்ன ஒரு வருஷோ எ பின்னாடி வருவீங்களா?
அப்பரோ காலேஜ் முடுஞ்சு ஆளுக்கு ஒரு பக்கம் போயிடுவோ,காலத்துக்கு,தூரத்துக்கு எதையு மறக்கடிக்குற சக்தி இருக்கு.
கொஞ்ச நாள் கலுச்சு பார்த்தா எல்லாமே மாரி இருக்கோ.என்றேன்

உங்க 30 ரூபா,என்று கையில் வைத்து விட்டு,பின்னாடி வராதீங்க.என்று கூறி விட்டு சந்தைக்குள் வந்தேன்.

தொடரும்......

எழுதியவர் : anuranjani (21-Jan-19, 12:23 am)
சேர்த்தது : அனுரஞ்சனி மோகன்
பார்வை : 311

மேலே