ரேனுஸ்ரீ - பகுதி 1
வணக்கம் :-
ரேணு இங்க வெஜிடபிள்ஸ் எல்லா ரொம்ப பிரெஷ்ஷா இருக்கு இல்ல.என்று என் தோழி அம்மு என்னிடம் மகிழ்ச்சியாக கூறினால்.
எ இருக்காது?சுத்துவட்டார கிராமங்கள் வெளஞ்ச காய்கறி,பூ,பழம்,னு எல்லாத்தையு கொண்டுவந்து இங்கதா சந்த போட்டு விக்குறாங்க,அதுவு sundays ல மட்டு.என்று கூறினேன்.
நம்ப நித்யாக்குதா தங்க்ஸ் சொல்லனு அவதா இந்த மாரி சந்த இருக்கு செமஸ்டர் ஹாலிடே கு வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி வேணுனா வெஜிடபிள்ஸ் வாங்கிட்டு போங்கனு சொன்னது.என்றால் அம்மு.
நானும் அம்முவும் பேசிக்கொண்டிருந்த போது என் அம்மாவிடம் call வந்தது.
ஹலோ அம்மா.என்றேன்
எங்கம்மா இருக்க,பரிச்சதா நேத்தே முடுஞ்சது இல்ல,வீட்டுக்கு வராம இன்னோ அங்க என்ன பண்ணிட்டு இருக்க?
அம்மா நானு,அம்முவு திருச்சி ல இருந்து தஞ்சாவூர் போற ரூட்ல சண்டே மார்க்கெட் ஒன்னு இருக்கு,இங்க வெஜிடபிள்ஸ் ல ரொம்ப நல்ல இருக்குனு சொன்னாங்க அதா வாங்கிட்டு போலான்னு வந்தோ.
இப்பதா உங்க அப்பாயி அதிசயமா மூணு மூணு கேஜி வெங்காயோ,தக்காளினு எடுத்துட்டு வந்து கூடுத்துட்டு பொனாங்க,அங்க போறதுக்கு முன்னாடி எ கிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு போய் இருக்கலா இல்ல?
இங்க சேலத்துல கிடைக்காததா?
சரி எதுவு வாங்காத பஸ்ச பிடுச்சு வீட்டுக்கு வந்து சேறு.என்று கூறினார்
இல்ல நா வாங்கிட்டுதா வருவ.என்றேன்
என்னமோ பன்னு.என்று கூறினார்
அம்மா வெண்டக்கா வாங்கட்டா?அண்ணாக்கு பிடிக்கு இல்ல?ஆமா அண்ணா எப்ப வீட்டுக்கு வராணா?என்று கேட்டேன்
அவன் நாளைக்கு ராத்திரி சென்னைல இருந்து கிளம்புறதா சொன்னா.என்றார்
சரி உனக்கு பிடுச்ச காளான்,அப்பாக்கு பிடுச்ச கத்தரிக்க,அண்ணாக்கு பிடுச்ச வெண்டக்கா வாங்கிட்டு வர சரியா?என்று கேட்டேன்
சரி சரி திருச்சி விடும்போது எனக்கு call பன்னு,பாத்து பத்தரமா வா,வெக்கட்டா?என்று கேட்டு விட்டு call cut செய்தார் .
ரேணு என்று என் அருகே வந்து என் பெயரை கூறி அழைத்தால் அம்மு.
என்ன?என்று அவளை பார்த்து கேட்டேன்.
கொஞ்சோ பின்னாடி திரும்பி பாரு.என்றால்
தொடரும்......