செல்வமும், வறுமையும் உரையாடல்

செல்வமும் வறுமையும் உரையாடல்

செல்வம் ...சீ, சீ இனியும் இங்கு ஏன் நீ/
வறுமை ....இவ்வளவு நாளாய் நான் இங்கு இருந்தேன்

செல்வம் .....அதனால் என்ன /
வறுமை .... திடீரென நீ விரட்டினால்

செல்வம் .... எங்காவது போய்த் தொலை என் கண்முன் நில்லாதே
வறுமை .....புதுசா பணத்தை வாரிக் கொடுக்கிறாய் நீ என்னை எட்டி உதைக்கிறாய்

செல்வம் .... நான் வந்துட்டேனல்ல ,உனக்கு இனி வேலை இல்லை போய்விடு
வறுமை ,,,,,நான் தூங்கி வழிந்த இடம் இது விட்டுப்போக மனமில்லை

செல்வம் ,,,,,,உன்னால்தான் இந்த வீடும் மக்களும் வறுமையில் வாடினர் ,உன் சோம்பேறி தனமும்
நன்கு புரிகிறது
வறுமை ,,,,,வறுமை, கஷ்டம் என்பது செல்வத்தை தேடிட தந்திட்ட ஏணிப்படிகள் இதை நீ மறுக்க முடியாது, நானின்றி உன்னால் நிமிர்ந்திடக்கூட முடியாது தெரிஞ்சுக்கோ /

செல்வம் .....அதுதான் உன்னை மிதிச்சு நான் ஏறி வந்திட்டேன் பார்த்தாயா / இப்ப புரிந்து கொள் நீ என்றைக்குமே அடிமைதான், நான் ஏறிவரும் படிக் கற்களே நீதான்
வறுமை ......நானின்றி நீயில்லை, நன்றி மறவாதே , நான் இருப்பதால்தான் நீ ஜொலிக்கிறாய்
இருளின்றி ஒளியில்லை தெரிஞ்சுக்கோ.

செல்வம் .... வறுமையை ஒழிக்கதிட்டம் தீட்டுகிறார்கள், நீ அழிந்தால்தான் நாடு முன்னேறும்.
வறுமை .... செல்வம் வளர்ந்தால் நாடு முன்னேறும் அது தெரிந்துதான் நானும் மறைந்து மறைந்து வாழ்கிறேன் .ஆனாலும் சில மனிதனுக்கு புரியவில்லையே
.
செல்வம் ..... செல்வத்தின் செருக்கு வறுமை ஒழிக.ஒழிக
வறுமை ....வறுமையின் தாழ்மையான குரல் ஒலி ... செல்வம் வளர்க, வாழ்க ,வாழ்க.

எழுதியவர் : பாத்திமாமலர் (23-Jan-19, 11:42 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 89

மேலே