சகுணம்

மனைவி ; என்னங்க ... கோவிலுக்கு போயிட்டு வரப்ப உங்களோட செருப்ப நல்லா பாத்து போட்டு வந்தீங்களா .....

கணவர் : போவமோதெ பாதி கிழிஞ்சி போச்சி .....வரும்போது கோவில் வாசல்ல கெடந்த ஒன்னு அம்சமா
அமைஞ்சிடுச்சி ...இப்படி அமையுன்னு நா எதிர் பாக்கல போ !

__________________________________________________________________________________________________________

மாணவன் : சார் ... .... நீங்க பாடம் சொல்லிக்கொடுக்கர மாறி மத்த வாத்தியார்கள் இல்லீங்கள ....பெரிய
வாத்தியாருகிட்ட சொல்லி நடவடிக்க எடுங்க சார் !

வகுப்பாசிரியர் : எனக்கு ஐஸ் வெச்சது போதும் ... பெரிய வாத்தியாரு உங்கப்பா தான ...அத அவர் பாத்துக்குவாரு ...
நீ படிக்கரத்த பாரு . !

_____________________________________________________________________________________________________________

மருமகன் : சுந்தரி .... உங்கம்மாவுக்கு என்ன டிப்பன் வேணும்னு கேளு ...........

மனைவி - சுந்தரி : மொதல்ல எனக்கு என்னா வேணும்னு கேக்க வக்கில்ல இப்ப வந்த எங்கம்மா மேல அவ்வளவு
அக்கரயா கேக்கரீங்க !

__________________________________________________________________________________________________________

பக்கத்து பெட் நோயாளி : கதிரேசன் சார் .. நீங்க வந்து இப்பதான் நாளு நாளாவுது ...அதுக்குள்ள குணமாயிடிச்சா .!.
கதிரேசன் : சீக்கு வந்து என்ன டைம்டேபல் பாத்தா வருது ......அதுக்கு கொடுக்கரத்த கொடுத்தா
அது துண்ட காணம் துணிய காணும்ம்னு ஆள உட்டுட்டு ஓடிடும் !
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மருமகள் : மாமி இன்னிக்கி உங்க மகனோட பிறந்த நாளு ......என்ன ஸ்பெசல் பண்ணலாம் !
மாமியார் : இந்தா அவன் வாட்ஸப்ல அனுப்பனத செஞ்ஜி கொடு .......!
மருமகள் : ஐட்டத்த பாத்தா நீங்க லிச்ட் போட்ட மாறி இருக்குத !
மாமியார் : அதுக்கென்ன இப்ப ...நா போட்டா என்ன ..இல்ல யென் பையன் கேட்டா என்ன ..நீ செஞ்ஜி
கொடுக்கமாட்டன்னு சொல்லுவியென்னெ !

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குடுப்பமாது : காய்கறி வெலய பாத்து போடுங்க ...................
காய்கறி வியாபாரி : கவல படாதீங்க .... நா வந்து வழக்கமா ..நல்லா நிறுத்து .. ஆளலோட வேய்ட்ட பாத்துதான்
வெலய போடுவன் ...!

எழுதியவர் : (23-Jan-19, 8:28 pm)
பார்வை : 52

மேலே