தரை இருக்கு உன்னைத் தாங்க
எவற்றையும் எவறாலும் எப்போதும் மாற்ற இயலாது
நீ முயன்றால் மட்டுமே முன்னேற்றமடைவாய்
மூவாயிறம் ஆண்டிற்கு முன்பே இந்த முரண்பாடுகள்
ஆண்டிற்காண்டு தேவைப்படும் தேவைமிகுதியாலும்
தேடுவோரின் தேடுதல் குறித்த புரிதல் குறைவாலும்
சிறு சிறு சேர்க்க வேண்டும் என்ற சித்தாந்த இன்மையாலும்
அடுத்தவன் உழைப்பில் ஏற்படும் அங்கலாய்ப்பும்
பெரும் பொருள் ஈட்டுவதில் பேரிழப்பாய் உள்ளது
நம்மில் உள்ள நம்பும் தன்மையை நன்றாய் வளர்த்தால்
எவர் தெம்பையும் சார்ந்து தொங்குதல் வேண்டாம்
அஞ்சுதல் வேண்டும் அவசெயலுக்கும் சொல்லுக்கும்
அடுத்தவர் உயர்வாய் எண்ண ஆடம்பரம் வேண்டாமே
தரை இருக்கு உன்னைத் தாங்க
காற்று இருக்கு உயிரை காக்க
காட்டுத் திறமையை பொருள் ஈட்டும் பணியில்
திகட்டாமல் செய் உன் திறமைக்கேற்ற பணியை
தேவையான பொருள் சேர்ந்த பின்னாலும்.
-- நன்னாடன்