மோதிப்பார்

மூளையில் ஆயிரம்
மின்னல்கள்
மின்மினி பூச்சிகளாய்
மின்னி மின்னி
பாடாய் படுத்துகின்றன
அடங்க மறுக்கின்றன
அடக்குவாதத்தை எதிர்த்து
எத்தனை நாட்களுக்கு
அடிமைகளாய் இருப்பது
அதிகாரத்தை அவர்களாய்
கையிலெடுத்து ஆடுவது
இகழ்ச்சியான செயலே
அடங்க மறுத்து
திமிறுகிறது மனமும்
எதிர்த்து பேச தெரியாமல்
ஏழைகளாய் இருப்பவரை
ஏசிப்பிழைப்பது
கோழைத்தனம்
அதிகார வர்க்கமே வா
அடங்க மறுக்கும் காளைகள்
ஆடுகளத்தில் உள்ளன
மோதிப்பார்
முகம் தெரியாமல் போவாய்
முகவரி இழப்பாய்
பிணந்தின்னி கழுகே
மோப்பம் பிடித்தது போதும்
உன்னை புறந்தள்ள
மத யானைகள் பலவுண்டு
புலிகள் பதுங்குவது
பாய்வதற்கு மட்டுமே
சுத்தவீரனாக இருந்தால்
யுத்தகளத்திற்கு வா
போராடி பார்ப்போம்
நீயா!நானா!

எழுதியவர் : உமாபாரதி (23-Jan-19, 10:16 am)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 966

மேலே