சமுதாயக் கவிதை

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

*சமுதாயக் கவிதை*


*கவிஞர் கவிதை ரசிகன்*

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

மக்களை
சிலர்
பொருள்களால் வாழ வைப்பார்கள்

சிலர்
பணத்தால்
வாழ வைப்பார்கள்

சிலர்
ஆதரவால்
வாழ வைப்பார்கள்

சிலர்
உழைப்பால்
வாழ வைப்பார்கள்

ஆனால்
இந்த அரசியல்வாதிகள் மட்டும்தான்
மக்களை
வாழ வைக்கின்றன
"வாயினாலேயே........."

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

நல்லவர்களின்
இறப்புக்கு
வராத கூட்டம்

புரட்சியின் போது
பொங்கி எழுந்து
வராத கூட்டம்

உண்ணாவிரதத்திற்கு
ஆதரவு தெரிவிக்க
வராத கூட்டம்

நல்லது நடக்கும் இடத்திற்கு
வராத கூட்டம்....

நடிகையின்
கட்டிடத் திறப்பு விழாவிற்கு
திரண்டு வருகிறது...

இளைஞர்களே!
வாழ்க்கையில்
பொழுதுபோக்கு இருக்கலாம்
அதற்காக
வாழ்க்கையையே!
பொழுதுபோக்காக்கி விடாதே!

கவிதை ரசிகன்..

🍀🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻☘

எழுதியவர் : கவிஞர் கவிதை ரசிகன் (23-Jan-19, 11:58 pm)
பார்வை : 41

மேலே