மீண்டும் நானாகிறேன்
மீண்டும் நானாகிறேன் ...
வைகறை வெளிச்சம் கண்டு
மனமும் வாஞ்சை கொண்டது அந்த விடியலுக்காய்.
சட்டென விழித்த கண்கள்
ஏக இறைவனை துதித்தன.
துளிர் விட்ட எண்ணங்கள்
துணிச்சலை வேண்டின.
நினைவுக்குள் மூழ்கி
எண்ணக்கோர்வைகளுக்கு தலைப்பிட்டேன்.
"மீண்டும் நானாகிறேன்"
வாழ்வின் இந்த மாற்றங்கள்
எனக்கோ ஏமாற்றங்கள்
ஏக்கங்களால் தொலைத்த தூக்கங்கள்
நிழல்களால் மூழ்கடிக்கப்பட்ட
நிஜங்கள்
உணர்வுகள் உணராத
உறவுகள்.
எல்லோர் வாழ்விலும்
விதிக்கப்பட்டவை.
விதியை நொந்து
சோர்ந்து விடாமல்
மதியால் விலக்கி
விடியல் காண்கிறேன்.
மீண்டும் நானாகிறேன்.