தொலைந்தும் தொலையாமலும்

நட்சத்திரங்கள் நீல மேனியை அலங்கரிக்கும் வேளை.....
அரை நிலவும் உன்னை கண்டு புன்னகைக்க....
கருவிழி கடலில் மூழ்கச்செய்யும் ஓரப்பார்வை....

உன் நேரடி நோக்கலில் ஆயிரம் பிறை தரிசனம் கண்டேன்...
உன் அருகினில் வந்து நிற்கிறேன் உயிரற்ற ஓவியமாய்...

பக்கம் பக்கமாய் கிறுக்கிய கிறுக்கல்கள் வெற்றுக் காகிதமாகின இன்று
தோற்று போய் தஞ்சமடைந்தது.. உன் புன்னகை முன்னே...

காதலில் சுயமிழத்தல் தற்கொலை யானறிவேன்...
தெரிந்தும் எனை மறக்கிறேன் உன் முன்னே.....
இருந்தும் தள்ளியே தனித்தே நடக்கிறேன்...
உன் நிழலின் காலடியில் நினைவுகளுடன்...

எழுதியவர் : ப்ரியா (26-Jan-19, 9:41 am)
பார்வை : 572

மேலே