ஜென்மஜென்மம்

சுந்தருக்காக பெண் பார்க்க அப்பா அம்மா சகோதரர் சகோதரிகள் இன்னும் வேண்டப்பட்ட உறவினர் ஒன்றாக சென்றார்கள்

பெண் எப்பவும் பார்க்காத சந்தோஷத்தை விட அன்று எக்ஸ்ட்ரா ஆர்டினரியாக அவள் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியதை காண முடிந்தது

" இன்னும் மாப்பிள்ளையை பார்க்கவே இல்லை, காட்டவும் இல்லை, அதற்குள் இவ்வளவு பெரிய ஆனந்தமா ஒருவேளை மாப்பிள்ளை ஏற்கனவே வலைவிரித்து அதில் சிக்கி கொண்டு விட்டவளோ, இல்லை ஒருவேளை மறைமுக காதலா" பக்கத்து வீட்டு சிநேகிதி

"ச்சா...ச்சா...அந்த மாதிரி எச்ச பொருக்கி புத்தி யெல்லாம் ஏங்கிட்ட கெடையவே கெடையாது, நான் நேத்தைக்கும் சைவம் தான் இன்னைக்கும் சைவமே தவிற அசைவம் கிடையாது " ஜானகி அவள் மூக்கை உடைத்தாள்

"பின்னே எப்படி இவ்வளவு சந்தோஷம் திடீர்னு "

" அவர் உள்ளே வருகை தருகையில் நான் மாடியில் இருந்து ஆளை பார்த்து விட்டேன் "

"திருடி அதானே பார்த்தேன் இதில் இருந்து தெரியிது உன்னோட அவசரம் "

"போடி.. என்னை வெறுப் பேத்தலன்னா இவளுக்கு தூக்கமே வராது "

பெண்ணை அலங்காரம் பண்ண சினிமாவில் உதவி மேக்கப் லேடியான தன் சிநேகிதியை வரவழைத்து இருந்தாள்

அலங்காரம் ஆரம்பித்து ஒருவகையாக முடிந்தது அவளுக்கு மூவாயிரம் ரூபாய் பீஸ் கொடுத்து அனுப்பி வைத்தாள்

பெண்ணை தேனீர் உபசரிப்பொடு அழைத்து வந்து நிலவை உதிக்க வைத்து காட்டினார்கள்

சுந்தரத்திற்கு பெண்ணை பார்த்ததுமே டபுள் ட்ரிபள் ஓக்கே சொல்லிட்டான் தனது அக்கா வின் காதில், கூட வந்தவர்கள் எல்லோருக்கும் பிடித்து விட்டது என்பதை சொன்னார்கள்

பெண்ணுக்கு மாப்பிள்ளையை மாடியில் நின்று அவர் வரும் போது பார்த்ததுமே பிடித்து விட்டது என்பதை கூறினாள்

எல்லாம் முடிந்து அவரவர் விருப் பங்களை பரிமாறிக் கொண்டு சந்தோஷமாய் மாப்பிள்ளை வீட்டாரை வழி அனுப்பி வைத்தார்கள்

பெண் திடுதிடுவென மாடிக்கு ஓடினாள் கையசைத்து வழியனுப்ப, எல்லாம் சென்றபின் கீழே இறங்கி வர திரும்பினாள் ஒரு கடிதம் அவள் கால் பட்டு தெரித்து ஓடியது தெரிந்தது எடுத்து பார்த்தாள் பிரித்தாள் படித்தாள்

"" ஹலோ ஜானகி, என்ன ரொம்ப சந்தோஷம் போல இருக்கு, உன்னை பெண் பார்க்க வந்த சுந்தரம் என்னும் கஜேந்திரன் , அவர் எனக்கு சொந்தமானவர், என்ன புரிய வில்லையா ? அவர் எனக்கு மட்டுமே சொந்தம், ஓக்கே கீக்கே சொல்லி தொலைச்சே, நான் ஓக்கே சொன்ன உன்னையே தொலைச்சிப் புடுவேன் "" என்று எழுதப்பட்டு இருந்தன

மாடியிலேயே உட்கார்ந்து கண் கலங்கிய படி தேம்பல் கண்டுவிட்டது முகம் சிவந்து விட்டது, இரண்டு கண்களும் ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது, அலங்காரம் எல்லாம் அலங்கோலமாய் மாறிவிட்டது, தலை ஒரு கோலம் உடுத்தி இருந்த துணி ஒரு கோலத்தில் அமர்ந்திருந்தாள்

மாப்பிள்ளையை வழியனுப்பி விட்டு உள்ளே வந்தவர்கள் பெண்ணை அழைத்தார்கள் அவளின் முழு விருப்பமதை விசாரிக்க

ஜானகி கீழே இல்லை எனவே எல்லாரும் மாடிக்கு ஓடினார்கள் அங்கே ஜானகி அலங்கோலமாக அமர்ந்து இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்கள்,

"என்னம்மா என்ன ஆச்சி, மாப்பிள்ளையை உனக்கு பிடிக்கவில்லையா, பின் எதற்கு அவர்கள் முன் சிரித்த முகத்தோடு ஓக்கே சொன்னாய், இப்போது ஒன்னும் ஆகிவிடவில்லை சொல்லு போன் பண்ணி விருப்பம் இல்லை என்று சொல்லிவிடலாம் " என்றார் அப்பா

கையில் வைத்திருந்த கடிதத்தை எடுத்து நீட்டினாள்

வாங்கி படித்து விட்டு உடனே மாப்பிள்ளைக்கு சேதி அனுப்பி திரும்பி வரச்சொல்லி அவசர சேதி கொடுத்தார் அப்பா

மாப்பிள்ளை இன்னும் வீடுபோய் சேரவே இல்லை சேதியை படித்துவிட்டு முக்கால் வழியில் வண்டியை திருப்பி னார்கள்

மாப்பிள்ளையும் மற்றவர்களும் வந்தார்கள் ஜானகியின் அப்பா அக்கடிதத்தை மாப்பிள்ளியன் கையில் கொடுத்தார்

மாப்பிள்ளை படித்தார் அதிர்ந்து போனார், பேச்சு வரவில்லை, மாப்பிள்ளையின் தந்தை

"என்னப்பா என்னாச்சு"

என்று கேட்க பதில் வரவில்லை கடிதத்தை அவர் வாங்கி படித்து விட்டு அவரும் அதிர்ந்து போய் அப்படியே தரையில் அமர்ந்தார், இன்னும் இருக்கப்பட்டவர்கள் என்ன என்று கேட்க பதில் இல்லை அவர்களும் கடிதத்தை வாங்கி படித்தார்கள்

“"என்ன அநியாயம், என் மகனுக்கு காதலி என்று ஒருத்தியும் கிடையாது அப்படி இருக்கும் போது திடீர்னு எவளோ குறுக்கே புகுந்து குட்டையை குழப்புகிறாள் "”
என்றாள் சுந்தரத்தின் அம்மா

ஜானகியின் அப்பா இரண்டு கைகளையும் கூப்பி
“" ப்ளீஸ் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கைகளை கூப்பி உயர்த்திக் காட்டினார்

யாரும் ஒன்றும் பேச விரும்பவில்லை புறப்பட்டு வெளியே போனார்கள்

போகும் போது வழியில்
"சுந்தரம் யாரடா அவள் "
அம்மா கேட்டார்கள்

"அம்மா வேணுமுன்னா தலையில் அடித்து சத்தியம் பண்ணுவேன் அந்த பெண்ணுக்கும் எனக்கும் காதலும் இல்லை ஒரு கண்டறாவியும் இல்லை
அவள் எப்படி இருப்பாள் ஏதாயிருப்பாள் என்று எனக்கு ஒன்னும் தெரியாதும்மா " என்றான் மகன் சுந்தரம்

"நீ தெரியாது என்கிறே அவள் உன் பெயரை எழுதி இருக்கிறாளே அதிலும் சுந்தரம் என்கிற கஜேந்திரன் என்று எழுதியிருந்தது ஒரு வேளை தப்பான விலாசத்தில் வந்த கடிதமோ , அவ மட்டும் என் கையில் கெடைச்சாள்னா செத்தா" அம்மா வின் ஆதங்கம்

ஜானகி அவள் அலுவலகத்தில் ரெசிக்னேஷன் கடிதம் கொடுத்து விட்டு வீட்டோடு இருக்கிறாள் யார் முகத்திலும் முழிப்பதில்லை அதன் பின் வரன்கள் வர அனுமதிப்பதில்லை கல்யாணம் என்ற பேச்சைண யாரும் எடுத்தால் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமை வரலாம் என்று எல்லோரையும் பயமுறுத்தி வைத்திருக்கிறாள்

ஒரு மாதம் நகர்ந்தது
"வேறு ஒரு இடத்தில் பெண் பார்க்க போறோம் என்னப்பா சொல்றே உன்னோட அபிப்பிராயம் என்ன சொல்" தந்தை மகனிடம் கேட்டார்

"எனக்கு ஒன்னும் அப்ஜக்க்ஷன் இல்லைபா, அவள் இல்லை என்றால் என்ன, வேறு பொண்ணா இல்ல, அவள் இல்லனா குடியா மூழ்கி போயிடும்" என்று ஏற்பாடு செய்யச் சொன்னான் மகன்

பெண் பார்க்க புறப்பட்டார்கள்
"டேய் சாமி படத்தை தொட்டு கும்பிட்டு கொண்டு வாடா முன்னால் நடந்தது போல் ஏதும் அசம்பாவிதம் நடந்திடக் கூடாதில்ல அதுக்கு தான் "என்றாள் அம்மா

பெண் வீட்டுக்குள் நுழைய தடபுடலாக வரவேற்பு நடந்தது அம்மா சொன்னாள் "சுந்தர் அவளை விட இவள் பெட்டர் எந்த குறையும் சொல்ல முடியாது அவள் மேக்கப் போட்டிருந்ததால் ஒன்னும் கண்டுபிடிக்க முடியல எதுவுமே இல்லாமல் பார்க்க இவள் மகாலஷ்மி மாதிரி இருக்கா "அம்மா சொன்னாள்

"விருப்பத்தை தாராளமாக எதுவானாலுமே சொல்லலிவிடலாமே" என்று பெண் வீட்டுக்காரர்கள் கேட்டார்கள்

"சுந்தரம் ஓக்கே ன்னான்" அப்பாவிடம்

"இங்கிட்டு ஓக்கேங்க அங்குட்டு எப்படியாம்" அக்கா கேட்டாள்

"100% ஓக்கே ங்கலாம் "பெண்ணின் விருப்பத்தை சொன்னார்கள்

"ரொம்ப சந்தோஷம் மேற்படி ஆகவேண்டியதை கூடிப்பேசி செய்தி அனுபிடுறோம்" என்று புறப்பட்டு போனார்கள்

போஸ்ட் மேன் பெண் வீட்டாருக்கு ஒரு கடிதத்தை கொடுத்து விட்டு போனார்

வாங்கி க்கொண்டு திருப்பி திருப்பி பார்த்தார்கள் யார் அனுப்பினார் என்று
அனுப்பியவர் விலாசம் குறிப்பிடப் படவில்லை பிரித்தார் படித்தார் பெண்ணின் தந்தை

"ஹலோ வாசுகி என்ன ரொம்ப சந்தோஷம் போல இருக்கு, உன்னை பெண் பார்க்க வந்த சுந்தரம் அவர் எனக்கு சொந்தமானவர், என்ன புரியவில்லையா? அவர் எனக்கு மட்டுமே சொந்தம், ஓக்கே கீக்கே சொல்லி தொலைச்சே, நான் ஓக்கே சொன்ன உன்னையே தொலைச்சிப் புடுவேன் "" என்று எழுதப்பட்டு இருந்தன

வாசுகியின் தந்தை அதிர்ந்து போனார் ஒரு கையில் கடிதம் மறுக்கை நெஞ்சில், ஆடிவிட்டார் அதைப்பார்த்து எல்லாரும் ஓடிவந்து " என்ன? என்ன? என்ன ஆனது" என்று கேட்க கையில் இருந்த கடிதத்தை நீட்டினார் வாசுகியின் தந்தை

வாங்கி படித்துவிட்டு
"ஐயோக்கியன் ஒன்றும் அறியாதவன் போல் என்னமா நடத்து இருக்கிறான், இதப்போல இன்னும் எத்தனை பேர் வயிற் றெரிச்சலை கொட்டிக் கொண்டிருக் கிறானோ நல்ல வேளை தாலியை கட்டுவதற்கு முன் அவனோட வண்டவாளம் தெரிய வந்துள்ளது

போனைப் போடுங்கள் வரவச்சி காரி கொத்தா அவன் முகத்தில் துப்புவோம்" என்றாள் வாசுகியின் தாய்

போனை போட்டு திரும்பி உடனேயே வீட்டுக்கு வாங்க என்று அழைத்தார்கள்

"மறுபடியும் அதேபோல் பிரச்சனையோ திரும்பி அழைக்கவேண்டிய காரணம் டிரைவர் வண்டியை மறுபடியும் பெண் வீட்டுக்கு கொண்டு போ" என்றார்கள் சுந்தரமும் அவன் உறவினரும்

வாசுகியின் வீட்டில் நுழைய வாசுகியின் தந்தை அக்கடிதத்தை சுந்தரம் கையில் நீட்டினார்

சுந்தரம் கடிதத்தை வாங்கி படித்தான்
அதே பழய குருடி கதவை திறடி கதை தான் சுந்தருக்கோ ஒன்னும் புரியவில்லை வாசுகியின் தந்தை பக்கம் திரும்பி

"இப்போது நான் எதை சொன்னாலும் நீங்க நம்பப்போறது இல்லை அதனால உங்களுக்கு என்ன சொல்லனும் வேறு இடம் பாருங்க ன்னு சொல்லப் போறீங்க அதானே " என்றான் சுந்தரம்

"பரவாயில்லையே கப்புன்னு புடிச்சிட்டியே....நோ மோர் ஆர்கியுமென்ட் ப்ளீஸ்" என்று வாசல் பக்கம் கையை நீட்டினார் வாசுகியின் தந்தை

"ஓக்கேங்க" பாக்கெட்டில் இருந்து மணிபர்ஸை எடுத்து ஒரு ஆயிரம் ரூபாயை நீட்டினான்

"இது எதுக்கு " வாசுகியின் தந்தை கேட்டார்

"நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ கையை நனைச்சிட்டோம் அதுக்காக, எங்களுக்கு ஓசியில் எங்கும் கையை நனைச்சி பழக்கமில்லை" சுந்தரத்தின் அப்பா

யாரும் வாங்க வில்லை எதிரில் இருந்த டீபாய் மேல வச்சிவிட்டு வெளியேறினார்கள்

போகும் பொழுது
" உனக்கு மட்டும் ஏண்டா இப்படி நடக்கிறது சுந்தரம் எனக்கு மட்டும் தான் என்று சொல்றவள் நேரா வந்து சொல்ல வேண்டியது தானே ஏன் இப்படி மறைமுகமா டார்ச்சர் பண்றா" என்றாள் அம்மா

" அம்மா அவள் யாருன்னே எனக்கு தெரியாது ம்மா, நான் அப்பா புள்ளம்மா, ஒரு ப்ரண்டு கெடையாது, ஒரு ப்ரண்டு வீட்டுக்கு நான் தேடிப் போறதும் கெடையாது, ஒரு ப்ரண்டு என்னைத் தேடி என் வீட்டுக்கு வருவதும் கெடையாது ஏன்னா எனக்கும் அப்பாவை போலவே வீன் சோலியெல்லாம் வச்சிக்கிறது இல்லம்மா இது உங்களுக்கும் தெரியும் இல்லையா, தெரிந்திருந்தும் ஏங்கிட்டேயே அவ யார்றான்னு கேட்கிறீங்க" என்றான் சுந்தரம்

"உனக்கு கல்யாணமுன்னு ஒன்று நடக்குமா? நடக்காதா? நடக்க விடுவாளா ? மாட்டாளான்னு ஒன்னும் தெரியலேயப்பா" என்றாள் அம்மா

" அது எனக்கெப்படிம்மா தெரியும் "

ஒரு மாதம் ஆறபோட்டு அப்பா சொன்னார்

" கடைசியா ஒரு தடவை இன்னொரு இடத்தில் ட்ரை பண்ணி பார்ப்போம் , அதிலேயும் இப்படி தான் என்றால் பிரம்மச்சாரியா இருந்து விட்டு போப்பா" என்றார் அப்பா

"நான் நெனைச்சதைத்தான் நீங்களும் சொல்றீங்கப்பா...அந்த கடைசி தடவைக்கூட வேணாமுன்னு நெனைக்கிறேன் ஏன்னா இது மேலே இருக்கிறவன் ஆடும் நாடகம் என்று எனக்கு தோணுதுப்பா இன்னொரு தடவ

முக்கம் குலைய வேணாமுன்னு நெனைக்கிறேன் நான் இப்படியே இருந்துவிட்டுப் போறேம்பா " மிகுந்த சோகத்துடன் சுந்தரம்

"இல்லப்பா எனக்காக கடைசியா ஒரு தடவை போய் பார்க்க லாம்பா"

"சரிப்பா....அப்புறம் உங்க இஷ்டம் ஏன் சொல்றேன்னா வெக்கப்படுறேன், அவமானமாக இருக்கிறது ப்பா அதுக்காக சொல்றேன்"

மூன்றாம் முறை, முறையாக புறப்பட்டு போக தயாராகி காரின் கதவை திறந்தான், காருக்குள் ஒரு கடிதம் கண்டெடுத்து அதை படித்துவிட்டு அப்பாவிடம் கொடுத்தான்

அப்பா பிரிக்க
"இதோ பார் கஜேந்திரன் சாரி சாரி சுந்தரம் உனக்கு என்று நான் எனக்கு என்று நீ என்று இருக்கும் போது
வேறு ஒருத்தி உன்னை சொந்தம்
கொண்டாட ஒரு கலாமும் விட்டு கொடுக்கவே மாட்டேன், என் உயிரே போனாலும் சரி " என்று எழுதியிருந்தது

"காருக்குள் இக்கடிதம் எப்படி வந்தது
யார் போட்டது, எட்டின தூரம் வரை யாரும் கண்ணில் படவில்லை சுந்தரம்

வாட்ச்மேன்...வாட்ச்மேன் "

"கூப்பிட்டீங்களா எஜமான் "

"கேட்டை திறந்து கொண்டு உள்ளே யார் வந்தது"

"எஜமான் யாரும் உள்ளே வரவும் இல்லை, வெளியே போகவும் இல்லை
எஜமான், அப்படி வந்தாலும் போனாலும் உங்க அனுமதி இல்லாமல்
உள்ளே வரவும் வெளியில் போகவும் வட்டுவிடுவேனா அப்படி யானால் நான்
இந்த வேலைக்கே தகுதியில்லை எஜமான் என் மேல் சந்தேகம் இருந்தால்
என்னை இந்த வேலையில் எந்த அதிகாரத்தைக் கொண்டு நியமித்தீர்களோ அதே அதிகாரத்தால் என்னை வேலையில் இருந்து எடுக்கவும் அதிகாரம் இருக்கிறது என்பதை தான் மறந்துவிட வில்லை எஜமான் "

"சுந்தரம்....யாராவது காசு பணத்தை காட்டி இந்த கடிதத்தை இவனே காரில் போடச்சொல்லி இவன் போட்டிருக் கலாம் எந்த திருடன் தன் திருட்டை ஒத்துக் கொண்டிருக்கிறான் ஒன்னு பண்ணு கணக்கை முடிச்சி நாளையில் இருந்து வரவேண்டாம் என்று சொல்லிவிடு" என்றார் அப்பா

"வாட்ச்மேன் உன் கணக்கை முடிச்சாச்சி இந்தா பிடி இனி நீ வேலைக்கு வரவேண்டாம் " வாட்ச்மேனை அனுப்பி விட்டான் சுந்தரம்

மூன்றாம் நாள் தோட்டத்தில் இருந்த காய், கறி பழவகைகள் மற்றும் தண்ணி தொட்டியில் இருந்த தண்ணி மோட்டார் மற்றும் மரம் செடி கொடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வைத்து இருந்த முப்பது மீட்டர் பிளாஸ்டிக் பைப்புகளை காணவில்லை என்பது தெரிந்து இது வாட்ச்மேன் வேலையாக தான் இருக்கும் என்று போலீசுக்கு சொன்னார்" சுந்தரத்தின் அப்பா

போலீஸ் வாட்ச்மேன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றது வீட்டில் வாட்ச்மேன் இல்லை

ஹார்ட் அட்டாக் வந்து மூன்று நாளாக ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகி இருப்பது தெரிய வந்தது

போலீஸ் சுந்தரம் அவர்களுக்கு தெரிய படுத்தியது இது "வாட்ச்மேன் மேன் மூன்று நாளாக ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பத்திரியில் இருப்பதை ஆஸ்பத்திரி ரிக்கார்டு சொல்கிறது அந்த திருட்டை அவர் செய்து இருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாக தெரிகிறது" என்று சொன்னார்கள்

சுந்தரம் மற்றும் அப்பா ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள் " எப்படி ஆனது" என்று கேட்டார்கள்

"பெண்ணுக்கு கல்யாணத்துக்கு இன்னும் ஒருமாதம் குறுக்கே இருக்கு செலவுக்கு நெருக்கத்தில் கொஞ்சம் பணம் உங்க கிட்ட கடனாக கேட்க இருந்தார் அதை மாதா மாதம் பிடித்துக்
கொள்ள சொல்ல இருந்தார் அதற்குள்
திடீர்னு வேலையும் போச்சின்னு சொல்லி விட்டு

உலகம் நம்பிக்கை யாய் உள்ள வங்க மேல அவநம்பிக்கை கொள்வது, நல்லவங்க போல நடிச்சி சுருட்டுறவங்க தோளில் கைபோட்டு கூடி குலாவுவது
தான் நம்பிக்கை வைக்கிறார்கள்

வீட்டில் சிசிடீவி வச்சிருக்காங்க அது ஓடுதோ ஓடலையோ தெரியாது ஓடுவதாயிருந்தால் அதைபார்த்து இருப்பார்கள் என் வேலை தப்பித்து இருந்திருக்கும் என்று கூறினார்ங்க

பொண்ணு கல்யாணத்தை எப்படி நடத்துவேன் என்று சொல்லிக் கொண்டே நெஞ்சில் கையை வைத்து அமுக்கிக்கொண்டார் தொப்பென்று தரையில் வீழ்ந்து விட்டார்
நெஞ்சில் வலி,வீழ்ந்திட்ட வேகத்தில் மண்டையில் அடி ஆஸ்பத்திரியில் சேர்த்தோம் "

வாட்ச்மேனோட மனைவி சொன்ன பிறகே சிசிடீவி பற்றி தலையில் அடித்து க்கொண்டான் சுந்தரம் பின் "

"அப்பா பில்லை கட்டிடுங்க நான் கொஞ்ச நேரத்தில் வந்துடுறேன் ,

" ஆன்டி உங்க வீட்டுக்காரர் எங்ககிட்ட எவ்வளவு பணம் கேட்க இருந்ததாக சொன்னீங்க "

"ஒரு இருபத்தையாயிரம் ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாருங்க"

"ஆஸ்பத்திரியில் பில்லை நீங்கள் கட்டாதீங்க, எங்க அப்பா கட்டிடுவார்

அப்புறம் உங்க கணவருக்கு வேலை உண்டு சீக்கிரத்தில் குணமானதும் வந்து வேலையில் சேர சொல்லுங்க "
என்று வீட்டுக்கு வந்தான்

முதலில் சிசிடீவி யை சார்ட் பண்ணினான் தேதி பிரகாரம் தேடிட வாட்ச்மேன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார் பிறகு ஏதோ ஒரு சாம்பல் நிற காற்று உள்ளே நுழைந்து கார் பக்கம் போகிறது காரின் கதவு தன்னாலே திறப்பது போல் தெரிகிறது பின் மூடிக்கொண்டது காற்று வந்தது போல் வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டது நிச்சயம் ஆகிவிட்டது

"வீணாக வாட்ச்மேன் மேல் சந்தேகப்பட்டு ஒரு உயிரை கொன்று இருப்போமே அந்த பழி பாவம் எங்கள் தலையில் விழுந்திருக்குமே கடவுளே அவரை காப்பாற்று என்று வேண்டினான்"

மற்றும் திருடு போனதை பார்க்க யாரோ முன்று பேர் முகத்தில் துணி கட்டி இருப்பதும் தெரிய வந்தது

உடனே போலீசாரை வீட்டுக்கு வரவழைத்து காட்டினான் சுந்தரம்

போலீசார் ஓக்கே சார் இது போதும் இதே போன்று போன மாதம் ஒரு பங்களாவுக்குள் நுழைந்து பிடி பட்டார்கள் அவர்களும் மூன்று பேர் தான் அவர்கள் தான் இதையும் செய்திருக்கக் கூடும் அவர்களை விசாரித்து விட்டு உங்களுக்கு தெரியபடுத்துறோம் என்று கூறி போனார்

இரண்டு மூன்று போலீசாரோடு அந்த திருடர்கள் வீட்டுக்குள் எந்த முன் எச்சரிக்கையும் கொடுக்காமல் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து தேட பொருள் கிடைத்து விட்டது உடனே சுந்தரத்தை ஸ்டேஷனுக்கு கூப்பிட்டு இதுவா பாருங்க

“இதுதான் சார்”

“சரி நீங்க போகலாம் “

சுந்தரம் வீட்டுக்கு வந்து ஐம்பதாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று கொடுத்த கம்ப்லேண்டை வாப்பஸ் வாங்கிக்கொண்டு நேராக ஆஸ்பத்திரி போனான் வாட்ச்மேன் மனைவி கையில் ஐம்பதாயிரம் பணத்தை கொடுத்து

"உங்க மகள் கல்யாணம் நல்லபடியாக நடத்துங்க" என்று கூறி

வாட்ச்மேன் கிட்டே போனான் வாட்ச்மேனுக்கு விஷயம் கூறப்பட்டது இரண்டு கைகளையும் கூப்பி வணங்கியவாறு எழ முயற்சித்து கொண்டிருந்தார்

"ஐயோ அங்கிள் படுங்க படுங்க என்று வாட்ச்மேன் காலை தொட்டு கும்பிட்டு அங்கிள் என்னை மன்னிச்சிடுங்க" என்றதும் வாட்ச்மேன் கண்கள் கலங்கினர்

"ஐயா...என்ன இது "

"அங்கிள் நான் தப்பு செய்தவன் அதனால் காலை தொட்டு கும்பிட்டால் ஒன்னும் தப்பில்லை நான் ஒன்னும் குறைந்து விடமாட்டேன் இனி உங்க கடைசி காலம்வரை நீங்க தான் வாட்ச்மேன் "

வாட்ச்மேன் ஏதோ சிந்தித்து விட்டு "ஐயா...நான் ஒன்னு சொன்னா என்னை தப்பா நெனைக்க மாட்டீங்களே "
"இல்லை என்ன தாராளமா சொல்லுங்க"

"நீங்கள் பொகிற வழியில் ஒரு ஊர் வரும் அங்கே ஒருத்தர் குறி சொல்றார்
அவரை ஒருதடவை சந்தித்து பாருங்க
உங்க கல்யாணத்திற்கு எது தடையாக இருக்கிறதோ அது நீங்கிடும் என்று நான் நம்புகிறேன் ஐயா" என்றார் வாட்ச்மேன்

"பேரு என்ன சொன்னீங்க"

"மணிகண்டன் சுவாமிகள் "

"சரி அதையும் ஒருதடவை பார்த்து விடுவோமே" நான் வரட்டுமா

"ரொம்ப நன்றி ஐயா"

"அங்கிள்....என்ன...இது...ஐயா..ஐயா...ன்னு...இனிமேல் என்னை ஐயான்னு கூப்பிடாதீங்க ஐயா இங்கே இருக்கிறார் என்னை சுந்தரம்ன்னு பேரை சொன்னா போதும் இதுதான் உங்க பொண்ணுங்களா "
பெண் பிதா மகன் இருவர் காலில் விழுந்து வணங்கினாள்

"எழுந்திரும்மா" தன் கழுத்தில் கிடந்த மூனு பவுன் தங்க சங்கிலியை கழட்டி போட்டார் சுந்தரத்தின் அப்பா

"அங்கிள் பெட்டில் படுத்து இருந்தது போதும் சீக்கிரத்தில் வந்து பொழைக்கிற வழியை பாருங்க " என்றான் சுந்தரம்

"சுந்தரம் வாட்ச்மேன் சொன்னாரே அந்த
நபரை போய் தான் பார்ப்போமே"

அப்பா ஒருத்தனுக்கோ இல்லை ஒருத்திக்கோ அமைய போறது, எவன் எவனோ இல்லை எவள் எவளோ, அவளவள் இல்லை அவனவன், அம்சமாக அமைந்தால் தான் வாழ்க்கை

அதை விட்டு அவரவர் இஷ்டத்திற்கு கண்ட கண்ட கசுமாலங்களை, கழுசடைகளை, கழுவா மூஞ்சிகளை, கண்டறாவிகளை பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் விருப்பமின்றி அமைத்துக்கொள்கிற வாழ்க்கை எல்லாம் நிம்மதியான வாழ்க்கை இல்லை பலப்பல பிரச்சனைகள், பலப்பல ரூபத்தில் உருவாகும் வித்தை ஊன்றி அதற்கு தண்ணீர் ஊற்றி மூளைக்க வைத்து மரமாகி இடையூரு விளைவிக்கும் போது வெட்டவும் முடியாமல் அப்படியே விட்டுவிடவும் முடியாமல் தவியாய் தவிக்கிறார்கள்
நாம எல்லாவற்றையும் மூட்டை கட்டி போட்டுவிட்டு நம்ம வாட்ச்மேன் அங்கிள் சொன்னவரை போய் தான் பார்ப்போமே"

"செவ்வாய் தோஷத்தில் பிறந்தவர்களுக்கும் இதுபோல் தான் ஆகிறது என்று சொல்ல கேள்விபட்டிருக்கேன் , இன்னொன்னு ஏதோ ஒரு ஆவி நம்மை டிஸ்டர்ப் பண்ணுவது போல் ஒரு சந்தேகம் சிசிடீவியில் பார்த்ததில் இருந்து
ஒரு சந்தேகம் அதனால சொல்றேம்பா "

"சரிப்பா...போகலாம் நமக்கு என்ன நமக்குள் எழும்பிய சந்தேகங்கள் நிவர்த்தி ஆகவேண்டும் "

நேராக மணிகண்டன் சுவாமிகள் இருப்பிடத்திற்கு சென்றார்கள் இதுவரை நடந்தவைகளை சொன்னார்கள் ஆனாலும் சிசிடீவி விஷயத்தை சொல்லவில்லை வேண்டும் என்றே அது சுவாமிகளை பரிசோதிக்கவே

சுவாமிகள் சொன்ன எல்லாவற்றையும் கேட்டுவிட்டு,

"தம்பி இப்படி வா, அந்த சக்கரத்தில் மத்தியில் போய் அமறு"

என்று சொல்லி விட்டு சுந்தரத்தின் தந்தையை அழைத்து காதில் எதையோ சொன்னார், அவரும் தலையை ஆட்டிக்கொண்டு வந்து கைபேசியை சுந்தரத்தின் எதிரில் வைத்தார்

"தம்பி இப்போ கண்ணை மூடி உன் குல தெய்வத்தை உன் சிந்தையில்வை வேறு நடந்ததை, நடத்த நினைத்ததை எல்லாம் மறந்துவிடு" என்று கூறி
மந்திரத்தை துவக்கினார்

சில நிமிடங்கள் கழித்து தம்பி பேச ஆரம்பித்தார்

"என்ன பூங்கோதை, எப்படி இருக்கே, நீ பெரிய பணக்காரி, நான் பரம ஏழை அதனால் என்னால் உன்னை அடைய ஒரு ஆணியைக்கூட என்னால் புடுங்கமுடியாது அதே சமயத்தில் நீ நினைத்தால் நம் உறவு நீடிக்க ஒரு முடிவு கட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது"

சுவாமிகளின் உதவியாளர் பெண்மணி மேல் மருள் வந்தது சுவாமிகள் அவளை தம்பியின் பக்கத்தில் தூக்கிவரச் சொல்லி அமரச்செய்தார்

"இதோபார் கஜேந்திரா இரண்டு வழி இருக்கிறது ஒன்னு நாம ரெண்டு பேரும் எங்கே யாவது ஓடிப்போக வேண்டும், இரண்டாவது இங்கே இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளணும் இது இரண்டில் நீ எதை சொன்னாலும் எனக்கு சம்மதம் அதே சமயத்தில் மறு ஜென்மமென்று ஒன்று இருப்பது நிஜமென்றால் ஒன்று சேரலாம் ஆனால் நானின்றி நீயும் அல்லது நீயின்றி நானும் தனிமைப்படுத்த படுவோமேயானால் அவர்கள் நிம்மதியை கெடுக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்றாள் "

"கஜேந்திரன் நம்மை என் அப்பா வின் ஆட்கள் தெரிந்து கொண்டார்கள் நீ கையில் கிடைத்தால் கொன்றே விடுவார்கள் போ என்னை விட்டு ஓடிவிடு உன்னை வெட்டி விட்டால் என்னால் ஒரு நிமிடம் கூட உயிர் வாழ முடியாது"

"பூங்கோதை உன்னை விட்டு ஓட நான் ஒன்னும் கோழையில்லை இப்போது பயந்து ஓடினால் என் வாழ்நாள் பூராவும் இந்த கோழைத்தனம் என்னை துறத்திக் கொண்டே இருக்கும் நான் அதற்கு பயந்து ஓடிக்கொண்டே தான் இருக்க வேண்டும் எதையும் சாதிக்க முடியவே முடியாது அதனால என்ன நடந்தாலும் நான் உன்னை தனியாக விட்டுவிட்டு ஓடமாட்டேன்"

நெருங்கிவிட்டார்கள் ஒரே வழி இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து குதித்து விடுவதே சால சிறந்தது குதி "காதல் வாழ்க" என்றவாரு
குதித்து விட்டார்கள்

"இப்போது பரம ஏழையாக இருந்த நான் பணக்காரர் வீட்டில் பிறந்து வளர்ந்து வருகிறேன், பூங்கோதை கொழுத்த பணக்காரி யாயிருந்தவள் இப்போது பரம ஏழையாக ஒரு மலை சாதியினத்தில் பிறந்து வளர்ந்து வருகிறாள் இங்கே அவளுக்கு பெயர் பூங்கோதை இல்லை வரலஷ்மி எனக்காக காத்திருக்கிறாள் இப்போது எங்களை ஒன்று சேரவிடுங்கள் விடுங்கள் என்னை விடுங்கள்"

என்று இங்கே சந்தரமும் அந்த பெண்ணும் தரையில் சாய்ந்து விட்டார்கள்

இவர்கள் பேசிக்கொண்டதெல்லாம் கைபேசியில் பதிவாகியிருந்தது

இருவரையும் இருக்கையில் தூக்கி உட்கார வைத்தார்கள். சற்று நேரத்தில்
சுந்தரம் பழய நிலையை அடைந்தான்

"இன்னொரு சந்தேகம் சுவாமிகள் இதோடு மூனு நாலு கடிதம் எங்க கைக்கு கிடைத்தது அதை என் மகன் பெயரிடப்பட்டு எழுதுவது யார் அது எங்களை வந்து சேர்வது எப்படி என்பது பெரும் புதிராக இருக்கிறது முடிச்சா......."

"ஒரு உயிர் இன்னொரு உயிர் மேல அளவு கடந்த பாசம் உணர்வு கொண்டு இருக்கும் பட்சத்தில், அது தன் அருகினில் இருக்க விரும்பும் அல்லது இது அதன் அருகில் இருக்கவே விரும்பும் அப்போது ஆழ்ந்து உறங்கும் போது அச்சடலத்தை விட்டு ஆன்மா எழுந்து அதன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும், அப்படி யாராவது ராப்பகலாய் படிப்பவர் அல்லது எழுதுவோர் உடம்பில் நுழைந்து தன் விரும்பியபடி எழுதவைத்து பின் அவ்வுடலை விட்டு வெளியே வந்து காற்றலையின் உதவியால் அடித்து வந்து அது நினைத்த இடத்தில் சேர்த்து அங்கே நடக்கவிருக்கும் நல்ல காரியமோ கெட்ட காரியமோ அதனை நிறுத்தி வைக்கும்

இது அவர்கள் ஒருவரை ஒருவர் உணரும்வரை நடக்கும் அப்படித்தான் உங்களிடத்திலும் நடந்திருக்கக்கூடும் எதற்கும் நீங்கள் அப்பெண்ணையே மணமுடித்து வைத்தால் பிரச்சினை தீர்ந்து விடலாம் பிறகு உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் நான் தலையிட முடியாது "

"சரிங்க சுவாமிகள் நாங்க பற்படுறோம் உங்க ப்பீஸ்....."

"நீங்கள் விருப்பப்பட்டு என்ன கொடுக்க நினைக்கிறீர்களோ, அதை நீங்கள் போகும் வழியில் அனாதை பிள்ளைகள் காப்பகத்திற்கு நன்கொடையாக கொடுத்து ரசீது பெற்றுக் கொள்ளுங்கள்
இன்கம் டாக்ஸ் சலுகை உள்ளது உங்களுக்கு உதவியாக இருக்கும் நல்ல படியாக சென்று வாருங்கள் "

சவாமிகள் சொன்னது போல் பிள்ளைகள் காப்பகத்தில் தங்களின் உதவியை செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டு வீடு போய் சேர்ந்தார்கள்

ஒருவாரம் கழித்து மலைசாதியினரிடம் பயணமானார்கள் அங்கே ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்தார்கள்

அங்கே சிலர் வந்துக்கொண்டும் போயிக்கொண்டும் இருந்தார்கள்
அவர்களிடம் "இங்கே வரலஷ்மி என்று யாரேனும்....."

"வரலஷ்மிங்களா....என் பேத்தி தான் என்ன விஷயம் ஏன் அவளை கேழ்கிறீங்க "

"அவுங்கள பார்க்கனும் "

ஓ..படிக்கிறாளே அங்கே இருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று எண்ணி " இருங்க போன் பண்ணி வரவழைக்கிறேன் "

சற்று நேரத்தில் பெண் வந்தாள். அவளைப் பார்த்ததும் பிரம்மித்து போய் செதுக்கிய சிலை நிற்பதைப் போல் நிற்க, மலை சாதியினத்தில் இப்படி ஒரு பேரழகியா நான் நினைத்தது தப்பாகி விட்டது, இருவரும் ஒருவரை ஒருவர் சில நிமிடங்கள் வரை முறைத்து பார்த்துக் கொண்ட பின்பு

இதற்கு முன் உங்களை எங்கேயோ பார்த்த ஞாபகம் ஆனால் எங்கே என்றுதான் ஞாபகம் இல்லை என்றாள்
சற்று அமைதி காத்து பின்பு

கேட்டாள் " நீங்க என் காதலன் கஜேந்திரன் தானே ......"

"ஆமாம்....நீங்க.என் காதலி பூங்கோதை...தானே"

என்னை இங்கே தவிக்கும் படி விட்டுவிட்டு ஊரு உலகமெல்லாம் துணையை தேடிக்கொள்ள உங்களுக்கு எப்படி மனசு இடம் கொடுத்தது வருவீங்க வருவீங்கன்னு கண்ணு பூத்துப்போச்சி இருவரும் கட்டிப்பிடித்து அன்பை பகிர்ந்து கொண்டார்கள்

ஐயோ..ஐயோ..என்னவோ முன்ன பின்ன பாத்து பழகினவங்க மாதிரி
போய் கட்டி ப்பிடிக்கிறாளே

"ஆமாம் பெரியம்மா இது போன ஜென்மத்து உறவு இந்த ஜென்மத்தில் அடையாளம் கண்டு ஒன்னு சேர வந்திருக்காங்க அவுங்களை தப்பா சொல்லாதீங்க என்றார் சுந்தரத்தின் தந்தை "

பேரா உன் பேர்தான் கஜேந்திரனா அதாங்க.. நீங்க சொல்றது வாஸ்தவம் தாங்க நல்ல தூக்கத்தில் இருப்பாள் திடீர்னு எழுந்து கஜேந்திரா எங்க அப்பாவோட ஆட்கள் வராங்க உன்னை கொன்று விடுவார்கள் ஓடிவிடு... ஓடிவிடு என்று அலறுவாள் அழுவாள் கொஞ்சம் நேரத்தில் படுத்து தூங்கிவிடுவாள் நாங்கள் ஏதோ கனவு கண்டிருப்பாள் என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவோம்

இதுபோல் அடிக்கடி பினாத்தியவாரு இருப்பாள் அதற்கு அர்த்தம் இப்போது தான் புரிகிறது இது தெரியாமல் காத்து கரப்பு ஏதாவது பிடித்து இருக்குமோ என்று பார்க்காத மந்திர வாதி இல்லைங்க இதோ அவளை பெத்தவங்களே வந்துட்டாங்க என்ன பேசனுமோ அவுங்களை கேட்டு முடிவு பண்ணுங்கள்

வாங்க...வாங்க...நமஸ்காரம்

மலைசாதியினருக்கு அரசாங்கம் தரும் சலுகை அடிபடையின் கீழ் டிகிரி முடித்திருக்கிறாள்

இவளை பழயமாதிரி பணக்காரியாகவே பார்க்க விரும்புகிறோம் கல்யாணம் பண்ணி க்கவும் விரும்புகிறோம் உங்கள் சம்பிரதாய படியானாலும் சரி சுந்தரம் கழுத்தில் இருந்த ஐந்து சவரன் சங்கிலியை கழட்டி அவள் கழுத்தில் போட்டு வந்து கல்யாணத்திற்கு உண்டான ஏற்பாடுகளை செய்கிறோம்

அதற்கு முன் உங்களை ஒரு புகைப்படம் எடுத்து கொள்கிறேன் இப்படி வந்து நில்லுங்கள் இது ஏன் தெரியுமா

வீட்டில் அம்மா கேட்பார்கள் ஒரு புகைப்படம் எடுத்து வந்து இருக்கலாமே என்று நான் சொன்னது சரிதானே

ஐ……யோ….நான் சொல்ல நெனைச்சதை அப்படியே சொல்றீங்களே அப்போ நாங்கள் புறப்படுகிறோம் என்று கூறி பறப்பட்டார்கள்

"காரில் கடிதம் ஏதாவது கிடக்கிறதா என்று செக்பண்ணிக்கோபா என்றார் சுந்தரத்தின் தந்தை "

இனி அதற்கு அவசியம் இருக்காதுப்பா நேராக வாட்ச்மேன் அங்கிள் கிட்ட போவோம் முதலில் அவருக்கு நன்றி சொல்லனும் அவர் மட்டும் இந்த யோசயை கொடுத்தில்லேன்னா நமக்கு விடிவு காலமே இல்லை என்றாகி இருக்கும்பா ஆஸ்பத்திரிக்கு போனார்கள் அங்கே வாட்ச்மேன் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு இல்லை வேலைக்கே சென்றுள்ளதாக சேதி கிடைக்க சந்தோஷத்தோடு வீடு திரும்பினார்கள்

○○○○○○
ஆபிரகாம் வேளாங்கண்ணி "கண்டம்பாக்கத்தான்"

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (26-Jan-19, 9:39 pm)
பார்வை : 437

மேலே