அன்னை இல்லம்

மிக சந்தோஷத்துடன் மொபைலில் பேசிக் கொண்டிருந்தான் ராஜேஷ்.... "ரொம்ப சந்தோஷம் சார்.."
நானும் இதை எதிர்பார்க்கலை...!
ஓ... அப்படியா....? சரி சார்... நாம சந்திப்போம்..
என்று கூறிக் கொண்டே மொபைலை டேபிளில் வைத்தவாறே, மஞ்சு... என் செல்லமே... என்று குரல் கொடுத்தான்.
என்னங்க இன்னிக்கு ஏதோ ஒரே குஷி மூடு மாதிரி தெரியுது....?
அப்புறம் இருக்காத பின்னே...
என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியலையே...?
போனவாரம் "பெற்றோரை தவிக்கவிடும் பிள்ளைகள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேனே.. ஞாபகம் இருக்கா...?
ஆமாம்... இப்ப அதுக்கென்ன...?
அந்த கட்டுரைக்கு பலத்த வரவேற்பாம்..... பாராட்டி நிறைய பேர் லெட்டர் போட்டிருக்காங்கலாம், அதுமில்லாமல் நிறைய பேர் புதுசா புத்தகத்தோட சந்தாதார சேர்ந்திருக்காங்கலாம்...இது எவ்வளவு பெரிய சந்தோஷம் தெரியுமா.. அதுமட்டுமில்ல, இனி வாரம் ஒரு கட்டுரை எழுதச் சொல்லித்தான் இப்ப போன் பண்ணிணாங்க... இப்ப பேர், புகழ், வசதி எல்லாமே கூடிட்டே இருக்குதில்லையா...? கேள்வியுடனே மஞ்சுவின் முகம் பார்த்து புன்முறுவல் பூத்தான் ராஜேஷ்....
சரி.. சரி.. லேட்டாகுது கிளம்பு இன்னிக்கு எங்கம்மாவை பார்க்க வர்ரேன்னு போன வாரமே சொல்லியிருந்தேன்... இந்த வாரமாவது போயி பணத்த கட்டிட்டு வந்திர வேண்டியதுதான் என்றவாறே "அன்னை முதியோர் இல்லம்" நோக்கி கிளம்பினான், அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கும் தன்னுடைய தாயை சந்திக்க எழுத்தாளரான ராஜேஷ்....

எழுதியவர் : சா.மனுவேந்தன் (26-Jan-19, 1:52 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : annai illam
பார்வை : 254

மேலே