விவசாயின் பாடல்

விவசாயின் பாடல்
நான் வசந்தம் தேடி வந்தேன் மானே என் பொன்மானே !
ஆனால் வந்த இடமோ பாறையாய் போனது என் போன் மானே !
எனது உடல் கட்டையால் பாறையை உடைத்து இந்திரனை அழைத்தேன் என் பொன் மானே !
வந்த இந்திரனோ என்னை ஏர் பிடிக்கவைத்து சென்றுவிட்டான் என் மானே என் செல்ல மானே !
ஏர் பிடித்த கைகள் காய்க்கும் முன்னே,
வானத்து மேகம் வந்து, என்னை ஆனந்த நீரால் குளிரூட்டினான், எம் பொன் மானே ! மானே !
எனது தோட்டத்து பயிர்களோ பால் நெல் பூத்து குலுங்கி, வந்த கள்வனை கவர்ந்து சென்றது மானே என் காவேரி மானே !
நான் வந்த கள்வனை எவ்வாறு விரட்டுவேனோ கட்டுவனோ நீயும் கொஞ்சம் சொல்லு மானே என் செல்ல மானே,
நானும் இந்திரனையும் கேட்டேன் அந்த ஊர்காவலன் அய்யனாரையும் கேட்டேன் ,
அந்த ரெண்டு பேரும் என் கையிலே கடையத்தை குடுத்து வாளால் முடி என்று குடுத்து சென்றார்களே என் மானே என் வைகையாத்து மானே,
எனது ஏர் பிடித்த கைகளோ அந்த பசுமையை கண்டது, வாள்பிடித்த கைகளலோ கொடூர ரத்தத்தை கண்டது மானே என் பொன்னி மானே !
ஏழைக்கு பாதுகாப்பா நானோ வாள்பிடித்தேன் அவனுக்கு உணவு ஊட்ட நானோ ஏர் பிடித்து ஏரையும், போரையும் குல தொழிலககொண்டேன் என் மானே பொன் மானே.

எழுதியவர் : மு.சண்முகநாதன் (27-Jan-19, 11:00 am)
சேர்த்தது : சண்முகநாதன்
Tanglish : vivasaayin paadal
பார்வை : 55

மேலே