மதுவால் வீழ்ந்த தாய்

ஆசை ஆசையாய் நான் ஊட்டி வளர்த்த புள்ள
மோகத்துக்கு அடிமை பட்டு – விஷத்தை
தேன் என்று அருந்துகிறதே.....
தொட்டதெல்லாம் நோவு வந்துருமுன்னு
என் இரத்தத்தை பாலாக்கி ஊட்டி வளர்த்த பிள்ளையை – மண்
தின்ன காலம் கிட்டிருச்சே.......
என் சாவுக்கு பாலூட்ட வளர்த்த புள்ள – இன்று
அவனுக்கு வாக்கரிசி போடும் காலம் கிட்டிருச்சே......
என் பிஞ்சு மவனே என் நெஞ்சம் துடிக்கிறதடா – பாவி
மயனே நஞ்சு அருந்தி – சாவே
தஞ்சம் என்று போறியடா.....
அந்த கடவுளுக்கு என் அழுகை கிட்டலையோ – உன்
சாவு மோளமும் பத்தலையோ? – நஞ்சு
என்று தெரிந்தும் அதே தஞ்சம் என்று விக்கிறானே......
மு.சண்முகநாதன்

எழுதியவர் : மு.சண்முகநாதன் (27-Jan-19, 10:57 am)
சேர்த்தது : சண்முகநாதன்
பார்வை : 65

மேலே