அப்பான்னு நெனச்சன் தப்பாயிருச்சே

எண்னங்கள் வண்ணமாகலாம்
வார்த்தைகள் சுவையாகலாம்
உரையாடல்கள் இனிமையாகலாம்
எது எதுவாயினும் தப்பாயிடக் கூடாதல்லவா...?

ஆண்மையின் அர்த்தமே,
வீரத்தினதும், பெண்மையினது
பாதுகாப்புமேயாகுமல்லவா,
அவ் அர்த்ததை காமமாக்குவது
தப்பல்லவா....?

வயதுக்கு மதிப்பளிப்பதை
வசீகரமாக்க நினைப்பது
நெஞ்சம் பொறுக்காத வலியல்லவா.....?

எனது பெண்மையினை
மறந்தோ / ஏற்க மறுத்தோ
எனை தீண்ட நினைத்தீர்,
என் வயதில் உங்களுக்கு
பேத்தி இருக்குமல்லவா
அதையும் மறுத்தா உங்கள்
காகம் மேலோங்கியது....?

நான் இன்னும்
பறிக்காத மொட்டல்லவா
முடங்கிப்போன நீங்கள்
பறிக்க நினைப்பது தப்பல்லவா...?

தனிமையில் பயணித்தால்
பெண்கள் இசைவாக்கமடைவார்களென
நினைத்தீர்களோ...? இல்லை
காமப்பிச்சைக்காக
ஏங்கி்த் தவிக்கும்
விபச்சாரிகளென நினைத்தீர்களோ..?
உங்கள் தாயும்,தாரமும்
பெண் என்பதை மறந்து.....

கற்பழிப்பு,கடத்தல்
கொலை,கொள்ளையென
எங்கு செல்வதானாலும்
துணையோடு செல்ல
வேண்டிய நிலையில்
இப்படி காமவெறியாடுவது
தப்பல்லவா....?

வாலிபனுக்கு பயப்பட வேண்டியதில்லை இப்போது,
வாலிபர்களையும் மிஞ்சிவிட்டார்கள்
ஒரு சில வாயோதிபர்கள்...

ஐந்துநிமிட உங்கள் சுகத்திற்காக
பெண்மையில் விளையாடாதீர்கள்
அழிந்தே போவீர்கள்...

உங்களை நம்பி
பக்கத்தில் உட்கார கூட
மனம் கூசுகின்றது,
உங்கள் உரசல்களும்,
பேச்சுக்களின் நச்சுத் தன்மையும்,
கோபத்தையும் கவலையையும்
வரவழைக்கின்றது,
என் செய்வோம்
நாங்கள் பெண்கள்....

உரத்து சப்தமிட்டால்
அவமனபடுவது நீங்களல்ள
நாங்கள்தான்,
நீங்கள் வாழ்ந்து முடித்தவர்கள்
நாங்கள் ஆரம்பிப்பவர்கள்,
பொறுமையோடு இருப்பினும்
சம்மதமென நினைத்துவிடுகின்றீர்களே..?
நாங்கள் பெண்களல்லவா,
உங்களைவிட வலிமை குறைந்தவர்களல்லவா,
மென்மையின் அடயாளமல்ளவா,
புரிந்து கொள்ளுங்கள்
பாதுகாப்பளித்து எங்கள்
பெண்மையை காக்கும்
பொறுப்பு உங்களிடமும் உண்டென
உணந்திருங்கள்
நீடூளி வாழ்வீர்கள்....

ஒருவரை மட்டும் குறிப்பிட்டு
மற்றவர்களை நியாயபடுத்த
விரும்பவில்லை என் மனது
இது அனைத்து காமவெறி
கொண்ட ஆண்களுக்கும்,முக்கியமாக
வாயோதிபர்களுக்கும் சமர்ப்பணம்...
.....பர்ஷா...

எழுதியவர் : பர்ஷா (27-Jan-19, 2:06 pm)
சேர்த்தது : Mohammed Ashraf
பார்வை : 68

மேலே