அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா
———————-
அன்புள்ள அம்மா- நீ
அடுத்த பிறவியில் எனக்கு
மகவாக வேண்டும் - என்
மடியில் தலை வைத்து
இளைப்பாற வேண்டும்
இனிமையாய் சீராட்டிப்
பாலூட்ட வேண்டும்
பாராட்டித் தாலாட்ட வேண்டும்
இப்பிறப்பில் உன்னிடம் பட்ட
இனிய இக் கடன் நான் தீர்க்க வேண்டும்!
சாந்தா வெங்கட்