சாந்தா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சாந்தா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 1344 |
புள்ளி | : 32 |
ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியை.
விடியல்
___________
ஆழ் கடலின் உள்ளிருந்தெழும்
ஆதவனுக்கு அதிகாலையில் விடியல் !
பத்து மாதம் கடந்தால் கருவிலே சிறையிருக்கும்
பச்சிளம் சிசுவிற்கு விடியல்!
பாசமுடன் அன்னையிடும் அன்னமே
பசியென்னும் பிணிக்கு விடியல்!
பள்ளி இறுதி வகுப்பின் மணி ஓசையே
பாலகர்களின் விடியல்!
பொய்க்காமல் பெய்த மழையே
பூமி காக்கும் உழவர்க்கு விடியல்
பிறவி எனும் பெருங் கடல் நீந்த
பரந்தாமன் பாதமே விடியல்.
சாந்தா வெங்கட்
சின்னஞ்சிறு பாப்பாவே செல்லக்கிளியே
அன்புச் செல்லமே புதிய அன்புச் செல்லமே
இந்த அன்னை வயிற்றில் பிறந்த அன்புச் செல்லமே
பஞ்சமில்லா காலத்தில் பிறந்து விட்டாய் - ஆனால்
பஞ்சபாதகர் உள்ள நாட்டில் பிறந்தாயே
அஞ்சி அஞ்சிக் கூட வாழ்ந்திடலாம்
வஞ்சிக்கும் நெஞ்சரோடு சேர்ந்து வாழ முடியுமோ
பிஞ்சி குழந்தையையும் சீரழிக்கும்
பிணம் திண்ணும் மனிதரோடு வசிக்க முடியுமோ
கலகங்கள் காரணமுடன் எதிர் நிற்க்கையில்
கலங்காமல் எதிர்த்து அதை வெற்றிக் கொள்ளலாம்
காலுக்கடியில் தீவிரவாதம் மறைந்து வந்தால்
கண்டு அதை எப்படி வென்று வரலாம்?
சின்னஞ்சிறு பாப்பாவே செல்லக்கிளியே
சிறந்த ஆட்சி செய்ய நல்ல மன்னரும்மில்லே
கும்
காரிருள் நிறைந்த கருப்பையில் இருந்து
கதிரவன் தோன்றும் இப்புவிப்பையில் விழுந்தேன்
பிறந்த முதலே பேறறிவு பெற்றேன்
பெருஞ்சாதனைச் செய்து நீள் புகழ் அடைந்தேன்
புவன மாந்தர் காக்க புரட்சி பல செய்தேன்
கவனமுடன் பல பல கலைகளை நாளும் காத்தேன்
அதிசயங்கள் செய்ய நவீன அரசியலில் புகுந்தேன்
எட்டுத்திக்கும் சென்று எல்லா நாட்டையும் கண்டேன்
தொட்டதெல்லாம் செழிக்க தொண்டுகள் செய்தேன்
உயர்ந்த மரத்தின் மீது பெரும் இடி பட்டதைப் போல
உடலில் நோய் வரப் பெற்று நொடிந்தே போனேன்
எம் மருந்தும் அதனை எள்ளளவும் நீக்கவில்லை
என்னெதிரில் காலன் என் உயிரை கேட்க
என் உயிருக்கு பதிலாய் யாரை அனுப்ப முடியும்
நல் விலைக் கொடுத்து நாள் கடத்த முட
சிவனை மறவா மனம் வேண்டும்
——————————-
கண்ணிற்கு இமையானவன்
உடலுக்கு உயிரானவன்
நிழலின் நிஜமானவன்
கோடையில் நிழல் தரும் தருவானவன்
குளிரிலே இதம் தரும்(வெந்)நீரானவன்
அன்பருக்கு தென்றல் தரும் சுகமானவன்
உமை தேவியின் உள்ளம் கவர் கள்வன்
அன்பர்கள் மனமெனும் கோவிலில்
அமர்ந்தான் உம்பர் கோன்
அவனை மறவா நல் மனம் வேண்டும்
மறவா நல் மனம் வேண்டும் சிவனை
மறவா நல் மனம் வேண்டும்-அவனை
பாடும் நல் திறன் வேண்டும் -அவன்
பாதமலர் சேரும் வரம் வேண்டும்.
பட்ட பகல் எனினும்
வெட்டவெளி எனினும்
இருண்ட இரவு எனினும்
காலையிலும் மாலையிலும்
சாலையிலும் சோலையிலும்
எப்பொழுதும் எங்கும் நீக்கமற
நீ என்னுள்நிறைந்திட வேண்டும்.
உன்னை மறவா நல்
மறக்க நினைக்கும் நினைவுகளிலேயே திரும்பத்திரும்ப
வந்தமரும் மனம் எனும் குருட்டு ஈ!