மாண்புமிகு மரணம்
காரிருள் நிறைந்த கருப்பையில் இருந்து
கதிரவன் தோன்றும் இப்புவிப்பையில் விழுந்தேன்
பிறந்த முதலே பேறறிவு பெற்றேன்
பெருஞ்சாதனைச் செய்து நீள் புகழ் அடைந்தேன்
புவன மாந்தர் காக்க புரட்சி பல செய்தேன்
கவனமுடன் பல பல கலைகளை நாளும் காத்தேன்
அதிசயங்கள் செய்ய நவீன அரசியலில் புகுந்தேன்
எட்டுத்திக்கும் சென்று எல்லா நாட்டையும் கண்டேன்
தொட்டதெல்லாம் செழிக்க தொண்டுகள் செய்தேன்
உயர்ந்த மரத்தின் மீது பெரும் இடி பட்டதைப் போல
உடலில் நோய் வரப் பெற்று நொடிந்தே போனேன்
எம் மருந்தும் அதனை எள்ளளவும் நீக்கவில்லை
என்னெதிரில் காலன் என் உயிரை கேட்க
என் உயிருக்கு பதிலாய் யாரை அனுப்ப முடியும்
நல் விலைக் கொடுத்து நாள் கடத்த முடியுமோ?
நாட்டாண்மை பஞ்சாயத்ததில் நியாயம் கேட்க இயலுமோ?
--- நன்னாடன்.