விடியல்
விடியல்
___________
ஆழ் கடலின் உள்ளிருந்தெழும்
ஆதவனுக்கு அதிகாலையில் விடியல் !
பத்து மாதம் கடந்தால் கருவிலே சிறையிருக்கும்
பச்சிளம் சிசுவிற்கு விடியல்!
பாசமுடன் அன்னையிடும் அன்னமே
பசியென்னும் பிணிக்கு விடியல்!
பள்ளி இறுதி வகுப்பின் மணி ஓசையே
பாலகர்களின் விடியல்!
பொய்க்காமல் பெய்த மழையே
பூமி காக்கும் உழவர்க்கு விடியல்
பிறவி எனும் பெருங் கடல் நீந்த
பரந்தாமன் பாதமே விடியல்.
சாந்தா வெங்கட்