பூ சொல்லும் பாடம்

மகாதேவனோ
மனிதனோ
எவர் சூடினும்
மலருகின்றன மலர்கள்

சுகந்தமெங்கும் பரப்பி
வண்டுகளை
மெல்லக்கவர்ந்து
தேனூட்டிப் பின்
அவைவழி மகரந்தமும்
அனுப்பி விடுகின்றன

அனைத்து மலரும்
பறித்த பின்னும் -மொட்டுகூட கொய்தபின்னும்
தளராமல் மீண்டும்
அரும்புகின்றன

மலருக்கு ளாயிரம்
பாடங்கள்.....
அறிவாயோ மனமே!!!!

எழுதியவர் : முகில் (18-Mar-19, 1:07 pm)
சேர்த்தது : முகில்
Tanglish : poo sollum paadam
பார்வை : 40

மேலே