சிவனை மறவா மனம் வேண்டும்

சிவனை மறவா மனம் வேண்டும்
——————————-
கண்ணிற்கு இமையானவன்
உடலுக்கு உயிரானவன்
நிழலின் நிஜமானவன்
கோடையில் நிழல் தரும் தருவானவன்
குளிரிலே இதம் தரும்(வெந்)நீரானவன்
அன்பருக்கு தென்றல் தரும் சுகமானவன்
உமை தேவியின் உள்ளம் கவர் கள்வன்
அன்பர்கள் மனமெனும் கோவிலில்
அமர்ந்தான் உம்பர் கோன்
அவனை மறவா நல் மனம் வேண்டும்
மறவா நல் மனம் வேண்டும் சிவனை
மறவா நல் மனம் வேண்டும்-அவனை
பாடும் நல் திறன் வேண்டும் -அவன்
பாதமலர் சேரும் வரம் வேண்டும்.
பட்ட பகல் எனினும்
வெட்டவெளி எனினும்
இருண்ட இரவு எனினும்
காலையிலும் மாலையிலும்
சாலையிலும் சோலையிலும்
எப்பொழுதும் எங்கும் நீக்கமற
நீ என்னுள்நிறைந்திட வேண்டும்.
உன்னை மறவா நல் மனம் வேண்டும்.

எழுதியவர் : சாந்தா வெங்கட் (4-Mar-19, 3:15 pm)
சேர்த்தது : சாந்தா
பார்வை : 542

மேலே