சின்னஞ்சிறு பாப்பாவே செல்லக்கிளியே
சின்னஞ்சிறு பாப்பாவே செல்லக்கிளியே
அன்புச் செல்லமே புதிய அன்புச் செல்லமே
இந்த அன்னை வயிற்றில் பிறந்த அன்புச் செல்லமே
பஞ்சமில்லா காலத்தில் பிறந்து விட்டாய் - ஆனால்
பஞ்சபாதகர் உள்ள நாட்டில் பிறந்தாயே
அஞ்சி அஞ்சிக் கூட வாழ்ந்திடலாம்
வஞ்சிக்கும் நெஞ்சரோடு சேர்ந்து வாழ முடியுமோ
பிஞ்சி குழந்தையையும் சீரழிக்கும்
பிணம் திண்ணும் மனிதரோடு வசிக்க முடியுமோ
கலகங்கள் காரணமுடன் எதிர் நிற்க்கையில்
கலங்காமல் எதிர்த்து அதை வெற்றிக் கொள்ளலாம்
காலுக்கடியில் தீவிரவாதம் மறைந்து வந்தால்
கண்டு அதை எப்படி வென்று வரலாம்?
சின்னஞ்சிறு பாப்பாவே செல்லக்கிளியே
சிறந்த ஆட்சி செய்ய நல்ல மன்னரும்மில்லே
கும்பலால் கொலையும் பால் வன்மமும்
குடிசை தொழிலாய் வளருது இங்கே
குடியும் கொள்ளையும் அரசாங்கத்தால்
அங்கிகரிக்கப்பட்டது போலே நடக்குதுங்கே
குவளை மலர் போன்ற கண்ணு அழகே
குற்றம் செய்வோரை கண்டு விலகு.
---- நன்னாடன்