ரேனுஸ்ரீ - பகுதி 4

நான் அரசு நடுநிலை பள்ளியில் 6 ஆம் வகுப்பு "பி" பிரிவில் படித்துக்கொண்டிருந்தேன்.

எங்கள் பள்ளி தெற்கு பார்த்த நுழைவாயில் கொண்டதாகும்,பள்ளிக்குள் நுழைந்தவுடன் இடது பக்கமாக இருக்கும் வகுப்பறை 8 ஆம் வகுப்பு "சி" பிரிவு மற்றும் 6 ஆம் வகுப்பு "பி" பிரிவுக்கு(எங்களின் வகுப்பறை)சொந்தமாகும்.

எங்கள் வகுப்பறை சுமார் 11 மீட்டர் நீளமும்,5 மீட்டர் அகலமும் கொண்டதாகும்,
வகுப்பறையின் ஒருமுனையில் 8 ஆம் வகுப்பு "சி" பிரிவும் மறுமுனையில் எங்கள் வகுப்பறை இருந்தது,
இரண்டு வகுப்புகளுக்கும் தனி தனி வாசல் இருந்தது ஆனால் இரு வகுப்பிற்கும் இடையில் எந்த ஒரு தடுப்புசுவரும் இல்லை.

எங்கள் வகுப்பினர் அனைவரும் மேற்க்கு திசையை பார்த்தபடி அமர்ந்திருப்பர், 8 ஆம் வகுப்பினர் வடக்கு திசையை பார்த்ததுபோல அமர்ந்திருப்பர்,இரண்டு வகுப்பிற்கும் இடையில் சுமார் 4 மீட்டர் இடைவெளி இருக்கும்.

பள்ளி நுழைவாயிலை(school gate) அடுத்து வலது புறத்தில் 7 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு "எ" பிரிவும் இருந்தன,அதற்க்கு வலது பக்கத்தில் பிரின்சிபால் ஆபீஸ்(principal room) இருந்தது.
எங்கள் வகுப்பிற்கு எதிராக 8 ஆம் வகுப்பு "எ" பிரிவு இருந்தது.

பள்ளி நுழைவாயிலை(school gate) அடுத்து வலது பக்க வகுப்பறைகளுக்கும்,இடது பக்க வகுப்பறைகளுக்கும் இடையில் சுமார் 10 மீட்டர் இடைவெளி இருந்தது.

அன்று காலை எங்கள் வகுப்பு ஆசிரியர் ஈ.வெ.ரா (பெரியார்)
அவர்களை பற்றி சுமார் இரண்டு மணி நேரம் பாடம் எடுத்தார்.பாடம் சொல்லிக்கொடுப்பது போல இல்லாமல்,அவர்
நண்பரை பற்றி கூறுவதுபோல மிக எளிமையாகவும்,சுவாரிசியமாகவும் கூறினார்.
மற்றும் பெண் விடுதலைக்காக பெரியாரின் பெரும் பங்கினை பற்றியும் மிக அழகாக கூறினார்.

இன்று பெண் பிள்ளைகள் அனைவரும் பள்ளிக்கு வந்து ஆண்பிள்ளைகளோடு சாதி வேற்றுமையின்றி சமமாக உட்கார்ந்து கல்வி பயில்வதற்க்கு பெரியார் முக்கிய காரணமாவார்.என்று கூறினார்.

எங்கள் வகுப்பிற்கு அவர் ஒருவரே ஆசிரியர் ஆவார்.தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல்,சமூக அறிவியல் என ஐந்து பாடங்களையும் அவர் ஒருவரே சொல்லிக்கொடுப்பார்,அவர் பெயர் பழனி ஆகும்.

பாடம் நடத்தி முடித்ததும்,எனக்கு சிறிது வேலை இருக்கிறது அனைவரும் அமைதியாக நான் நடத்திய பாடத்தை படியுக்கள் என்று கூறிவிட்டு அவர் அவருடைய வேலையை செய்துகொண்டிருந்தார்.

எனக்கோ மீண்டும் பெரியாரை பற்றி படிக்கும் எண்ணமில்லை,புத்தகத்தை புரட்டிக்கொண்டே என் வகுப்பினர் அனைவரும் என்ன செய்துகொண்டிருக்கின்றனர் இன்று பார்த்தேன்.
சிலர் உட்கார்ந்துகொண்டே உறங்கிக்கொண்டிருந்தனர்,
சிலர் அவர் அவர் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தனர்.
(எங்கள் பள்ளியில் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டும் சீருடை அணிந்தால் போதும்)
அன்று வியாழக்கிழமை என்பதால் யாரும் சீருடை அணியவில்லை அதனால் சிலர் அவர் அவர் அணிந்திருந்த ஆடைகளின் சிறப்பை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்,
சிலர் சத்தம் வராமல் செட்,ராஜா ராணி,XOX என்று விளையாடிக்கொண்டிருந்தனர்.

எனது வகுப்பில் இருக்கும் அனைவரும் என்னை மிக அமைதியான பெண் என்று குறிப்பிடுவர்.
நான் யாரிடமும் அதிகம் பேசமாட்டேன்,எனது சகநண்பர்கள் யாரவது என்னிடம் பேசினால் அதற்க்கு மட்டும் பதில் பேசுவேன்,எனக்கென நெருங்கிய நண்பர்கள் யாரும் கிடையாது.

நான் வகுப்பில் இடது பக்கத்தில் இருந்து மூன்றாவது நபராக இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தேன்,என் முன்பாக அமர்ந்திருந்த என் வகுப்பு தோழி மற்றும் leader ருமான பானு என்னை பார்த்து விளையாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைத்தால்,நான் அவள் அழைப்பை மறுத்து விட்டு மீண்டும் புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன்.

அப்போது ராமலிங்க அடிகள் எழுதிய கடவுள் வாழ்த்து (திருவருட்பா)கண்ணில் பட்டது,மிக ஆர்வத்தோடு ராகம் அமைத்து பாடலாக மனதிற்குள் பாடிக்கொண்டிருந்தேன்.

கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான்-மண்ணில்
கலந்தான் என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து....

தொடரும்.....

எழுதியவர் : anuranjani (28-Jan-19, 6:07 pm)
சேர்த்தது : அனுரஞ்சனி மோகன்
பார்வை : 198

மேலே