என்னவனோ இவன்

மாவின் இளந்தளிரே
அவன் நிறம்
இரு குன்றுகள்போல்
திரண்டு பருத்த தோள்கள்
பரந்த மார்பு
குறுகிய இடை
சிவந்த நீண்ட பாதங்கள்
துடுப்பொத்த கைகளிரண்டும்
கால்களின் முட்டைகளையும்
தாண்டி நீண்டிருக்க
தாமரைப்பூப்போல் நயனங்கள்
எடுப்பான நாசி
கர்ணனின் கர்ணம்
சிவந்த பவளவாய் , இதோ
புன்னகைக்கின்றான் என்னை நோக்கி
என்று நான் நினைக்கின்றேன்
இவனல்லவோ வால்மீகி பாடும்
'ரகுகுல திலகன்' என்று அவனை
வர்ணிக்க தோன்றியது என் மனதில்
இந்த 'அவன்' , என்னவனாய் , என்னை
தான் தேடிவந்த 'சீதையாய்' காண்பானோ
என்னை ஏற்பானோ காதலியாய், துணைவியாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Jan-19, 2:07 pm)
Tanglish : ennavano ivan
பார்வை : 120

மேலே